தஞ்சாவூர், மார்ச்.1- தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் வழங்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராமன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் முனைவர் பாலகணேஷ், துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகள் சார்பில் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் வழங்கும் முகாமில் 10 வங்கிகள் கலந்து கொண்டனர். இம்முகாமில் 325 பேருக்கு ரூபாய் 16 கோடியே 50 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடனுதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டது. இம்முகாமில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தஞ்சாவூர் மண்டலத்தின் முதுநிலை மண்டல மேலாளர் வெங்கடசுப்பிரமணியன், முன்னோடி வங்கிகள் மேலாளர் ர.பிரதீப் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.