சென்னை,மார்ச்.02- 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்கவுள்ள நிலையில் மாணவர்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 3,316 தேர்வுகள் மையங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர்.
மேலும் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்கள், ஐயங்களைத் தெரிவிக்க மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் 9498383075, 9498383076 என்ற எண்ணைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.