தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு, எம்.கே.தியாகராஜ பாகவதர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட அறிவித்தது. இதைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.கே.தியாகராஜ பாகவதர் பிறந்த நாளான சனிக்கிழமை அவரது உருவச் சிலைக்கு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.