நாமக்கல், ஜன.31- விரைவில் திறப்பு விழா காணவுள்ள பள்ளிபாளை யம் மேம்பாலத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.மதி வேந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் தொடர் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தொலைநோக்கு திட்டத்துடன் கடந்த மூன்று ஆண்டுக ளுக்கு முன்பாக சென்னை - கன்னியாகுமாரி தொழிற்தட திட்டத்தில், சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கியது. சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மேம்பாலப் பணிகள் நடை பெற்று வந்த நிலையில், பணிகள் நிறைவு பெற்று விரை வில் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில், உயர்மட்டப் பாலப்பணிகள் குறித்து, பொதுப்பணிகள், நெடுஞ் சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச் சர் எ.வ.வேலு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் ச.உமா முன்னிலையில் வெள்ளி யன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தற்போது சாலைப்பணிகள், வடிகால் வேலைகள், கல்வெட்டுகள் மற்றும் உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகள் மற்றும் அளமேடு பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி ஆகியவைகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணி, சாலைப் பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தும் பணி போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 99 சதவிகித பணிகள் ரூ.369.25 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளன, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.