districts

img

தனியார் நிதி நிறுவன நெருக்கடியால் வாலிபர் தற்கொலை

சேலம், ஜன.31- தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளர் கொடுத்த நெருக்கடி யின் காரணமாக, கடனை கட்ட முடி யாமல் வாலிபர் தற்கொலை செய்து  கொண்ட நிலையில், அவரது உயிரிழப்பிற்கு நீதி கேட்டு உறவி னர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டம், தாரமங்க லம் அருகே உள்ள கணக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் என்பரின் மகன் அய்யந்துரை (30). சொந்தமாக தறி தொழில் நடத்தி வந்த இவருக்கு, கடந்த ஏழு வரு டங்களுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த சினேகா (26) என்ற பெண் ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு அர்ஜுன் (3), ஜாஸ் மிகா (4) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே, தறித் தொழில் நலிவடைந்த காரணத் தால் இளம்பிள்ளை பகுதியில் செயல்பட்டு வரும் கிராம சக்தி பைனான்ஸ் என்ற தனியார் நிதி  நிறுவனத்தில், தொழில் நடத்த ரூ.4 லட்சம் கடன் பெற்றுள்ளார். தவ ணைத் தொகையை மாதம் தவறா மல் கட்டி வந்த நிலையில், 19 ஆவது தவணைத் தொகை கட்டுவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இத னால் தனியார் நிதி நிறுவன மேலா ளர் சங்கர் என்பவர், மூன்று நாட்க ளாக வீட்டிற்கு வந்து கடன் தொகை  கட்டச் சொல்லி தொந்தரவு கொடுத் துள்ளார். இதனால் மனவேதனைய டைந்த அய்யந்துரை வியாழனன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே, வெளியே சென் றிருந்த மனைவி சினேகா, வீட்டில் கணவன் தற்கொலை செய்து  கொண்டதை கண்டு அதிர்ச்சடைந் தார். இதுகுறித்து தாரமங்கலம் காவல் காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்ற னர். இந்நிலையில், கடன் தொகை  கட்டச் சொல்லி தொந்தரவு செய்து வந்த தனியார் நிதி நிறுவன மேலா ளர் மீது வழக்குப்பதிவு செய்யாத  காவல் துறையை கண்டித்து, உடலை வாங்க மறுத்து அவரது  உறவினர்கள் சேலம் ஆட்சியர் அலு வலகம் முன்பு வெள்ளியன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து உயிரிழந்த நபரின் உறவினர் அய்யனார் என்பவர் கூறுகையில், அய்யந்துரை தனது சொந்த தொழிலுக்காக தனியார் நிதி நிறுவனத்தினடம் வாங்கிய கடனை, மாதந்தோறும் தொடர்ச்சி யாக கட்டி வந்தார். 19 ஆவது மாதம் 4 தேதி கட்ட வேண்டிய நிலையில், பணம் கட்டுவதற்கான காலதாம தம் ஏற்பட்டது. இதனால் வங்கி மேலாளர், அய்யந்துரையை பணம்  கட்டச் சொல்லி தொந்தரவு செய்து  வந்ததால் மனமுடைந்து தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார். ஆனால், இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்யா மல் உள்ளனர். எனவே, தனியார் நிதி  நிறுவன மேலாளர் சங்கர் மீதும், உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண் டும். இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், என் றார்.