100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளப் பாக்கியை உடனே வழங்க வேண்டும், என வலியுறுத்தி கோவை, சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலா ளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தி.ரவிச்சந்தி ரன், துணைத்தலைவர் ஆர்.செல்வராஜ், ஒன்றிய நிர்வாகிகள் எம்.ஆனந்தன், எம்.செல்வராஜ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.தெய்வேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.