கோவை, ஜன.31- மாநில நெடுஞ்சாலை ஆணை யம் அமைத்து வெளியிடப்பட்ட அர சாணை எண்:140ஐ திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சா லைத்துறை சாலைப்பணியாளர் சங் கத்தினர் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர். மாநில நெடுஞ்சாலை ஆணை யம் அமைத்து வெளியிடப்பட்ட அர சாணை எண்: 140ஐ திரும்பப்பெற வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்துவதால் தனியார் கார்ப்பரேட் கம்பெனிகள் 12,349 கிலோமீட்டர் சாலைகளில் 210க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி அமைத்து மக்களிடம் சுங்க வரி வசூல் கொள்ளை நடத்தப்படுவதை அனுமதிக்க கூடாது. மாநில நெடுஞ் சாலை ஆணையத்தால் ஐந்தாயிரம் அரசு பணியிடங்கள் ஒழிக்கப்படும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பறிபோகும். மாநில நெடுஞ் சாலைகள் அனைத்தையும் அரசு நிர்வாக பராமரித்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத்தி னர் வியாழனன்று கோவை மாவட் டம், கிணத்துக்கடவு உட்கோட்டம் சார் பில், கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் முன்பு கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர். இந்த கையெழுத்து இயக்கத் திற்கு, உட்கோட்டத் தலைவர் ரஜினி காந்த் தலைமை வகித்தார். தமிழ்நாடு சுகாதாரத் துறை மாநில துணைத் தலை வர் வி.சாந்தி துவக்க உரையாற்றி னார். கோட்டத் தலைவர் எம்.வெற்றி வேல், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.சுந்தரம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஜெகநா தன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணி யாளர் சங்க மாநிலத் தலைவர் பால சுப்பிரமணியம் நிறைவுரையாற்றி னார். முடிவில் கோட்ட செயற்குழு உறுப்பினர் எம்.செல்வராஜ் நன்றி கூறினார்.