- கோ.மகேஷ்வரன் கோபி, ஜன.31- வெயில் தொடங்கியதால் பொதுமக்கள் தாகத்தை தணிக்க அதிக அளவு தர்பூசணி விற்பனையாவதால், சாலையோர வியாபாரி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு பனியும் பகலில் வெயிலும் என பொதுமக்களை வாட்டி வதைக் கிறது. கோடை தொடங்க இன்னும் நாட்கள் உள்ள நிலையில், கோபியில் பகல் நேரங்க ளில் சுட்டெரிக்கும் வெயிலாக அனல் பறக்கி றது. இதனால், பொதுமக்கள் தங்களது தாகத்தை தீர்க்க கரும்புசாறு, பழச்சாறு அருந்தி தாகத்தை தணிக்கின்றனர் இந்நிலையில் கோபியில் இந்தாண்டு கோடை தொடங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் தோன்றுவதால் பொதுமக்களின் தாகத்தை தணிக்க சாலையோர கடைகளில் தர்பூசணி விற்பனை தொடங்கியுள்ளது. இதில், கரட்டூர், பேருந்துநிலையம், மொடச் சூர், பாரியூர் சாலை, தினசரி சந்தை, கச்சேரி மேடு, ல.கள்ளிப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் தர் பூசணிகளை டன்கணக்கில் வாங்கி விற்ப னைக்கு வைத்துள்ளனர். பொதுமக்களும் தர்பூசணியை வாங்கி அருந்தி தங்களது தாகத்தை தீர்த்தும் கொள்கின்றனர். இது தவிர பள்ளி குழந்தைகள் ஆசையாக தர்பூச ணியை வாங்கி அருந்தி மகிழ்கின்றனர். இதுகுறித்து சாலையோர் வியாபாரிகள் கூறுகையில், இந்தாண்டு தர்பூசணி விற் பனை கோடை தொடங்கும் முன்னே விற் பனை சூடு பிடித்துள்ளது. தற்போது தர்பூசணி கிலோ ரூ.18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று மட்டும் ஒரு கடைக்கு மட்டும் 20 டன் தர்பூசணியை விற்பனைக்கு வாங்கி வந்துள்ளதாகவும், இத னால் வரும் நாட்களில் தர்பூசணி தேவை அதி கரிக்கும் என்பதால் விவசாயிகளுக்கும் வியா பாரம் செய்பவர்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும், என்றனர். மேலும், வெயிலின் தாக்கத்தால் கரும்புச் சாறு கடைகளிலும், கம்பங்கூழ் கடைகளி லும் பொதுமக்களின் கூட்டம் வர தொடங்கி யுள்ளது. இதில், நீர் சத்துள்ள பழவகைகளில் வெள்ளரி உள்ளிட்ட காய்கனி வகைகளும் அதிகளவில் குவிந்துள்ளதால் பொதுமக்கள் நீர் சத்து பழங்களை வாங்கி செல்கின்றனர். கோடை தொடங்கும் முன் கோபியில் வெயி லின் தாக்கம் காணப்படுவதால் பொதுமக்க ளின் கூட்டம் தர்பூசணி கடைகள், கரும்புச் சாறு கடைகள், கம்பங்கூழ் கடைகளில் கூட் டம் காணப்படுகிறது.