யானையை வேறு இடத்திற்கு மாற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
கோவை, ஜன.31- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்வதாக கூறியும், உடனடியாக பிடித்து வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு நிலவியது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தடாகம் பகுதியில் வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை, மூன்று மனித உயிர்களை கொன்று இருக்கிறது. அத னால் அந்த யானையை வேறு இடத்திற்கு மாற்ற வேண் டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம். மாவட்ட வருவாய் அலுவலரிடம் கடந்த நவம்பர் மாதத்திலேயே கோரிக்கை வைத்தோம் அதற்கு ஏசிசிஎப் யானைகளை கண்காணித்துக் கொண்டு இருப்பதாக தெரிவித்தனர். அதற்கு நாங்கள் யானையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், கண்காணிப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என தெரிவித்தோம். ஆனால், நவம்பர் மாதத் திற்கு பிறகு மூன்று உயிர்களை அந்த யானை கொன்று இருக்கிறது. அதற்குப் பிறகு தான் இரண்டு கும்கி யானை கள் வர வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு யானை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் இன்றோடு எட்டு நாட்கள் ஆகியும் அதற்கான எந்த வித நடவடிக்கையும் இல்லை. அத னால், தான் இந்த குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்து இருக்கிறோம். நீங்கள் பிசிசிஎப்-க்கு கடிதம் எழுத வேண்டும் என கேட்டோம். மூன்று நாட்கள் பார்த்து விட்டு பிசிஎப் க்கு கடிதம் எழுதுவதாக ஆட்சியர் கூறியிருக் கிறார், என்றனர்.
தொப்பையாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை
தருமபுரி, ஜன.31- தொப்பையாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், என அப்பகுதி விவசாயி கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்துள்ள தொப் பையாறு அணை, 50 அடி உயரம் மற்றும் 298.6 மில்லி யன் கனஅடி கொள்ளளவு கொண்டது. ஏற்காடு மலை மற்றும் பொம்மிடி, ஊத்துபள்ளம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து, வேப்பாடி ஆற்றின் மூலம், தொப் பையாறு அணைக்கு தண்ணீர் வரும். கடந்தாண் டில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையின் காரணமாக, கடந்த டிச.2 ஆம் தேதியன்று அணை முழு கொள்ளவை எட்டியது. தொப்பையாறு அணையின் வலதுபுற கால்வாய் 17 கிலோமீட்டர் மற்றும் இடதுபுற கால்வாய் 24 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதன் மூலம் தருமபுரி, சேலம் மாவட்டப் பகுதிகளான செக் காரபட்டி, தொப்பூர், கம்மம்பட்டி, வெள்ளார், தெத்திகிரி பட்டி, மல்லிகுந்தம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங் களில், 5,330 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறு கின்றன. இந்நிலையில், விவசாயப் பாசனத்திற்கு அணை யிலிருந்து எப்போது தண்ணீர் திறக்கப்படும் என விவ சாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விரைந்து தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குடிநீர் இணைப்பை துண்டிக்க ஆணையர் உத்தரவு
நாமக்கல், ஜன.31- நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் வரி செலுத்தாமல் இருப்பவர்களின் வீடுகளில் குடிநீர், புதைச் சாக்கடை இணைப்புகளை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாமக்கல் மாநகராட்சி ஆணையர் ரா.மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் சொத்துவரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், புதைச் சாக்கடை கட்டணம் உள்ளிட்டவை தற்போது வரையில் 49 சதவிகிதம் மட்டுமே வசூலாகி உள்ளது. மாநகராட்சிக்கு வரவேண்டிய வரு வாய்கள் உரிய காலங்களில் வசூல் செய்தால் மட்டுமே மாநகரில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர் விநியோகம், திடக்கழிவு பணிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை யும் உரிய நேரத்தில் மேற்கொள்ள முடியும். பொதுமக்களில் பெரும்பாலானோர் வரி, கட்டணங்களை மார்ச் மாதம் தான் செலுத்த வேண்டும் என தவறுதலாகக் கருதி வருகின்ற னர். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களின் திருத்திய சட்டம் 2023-இன்படி 2024-25 ஆம் நிதியாண்டிற்கான முதல் மற்றும் இரண் டாம் அரையாண்டுக்குரிய தொகையை முழு வதுமாக 2024 அக்.31 ஆம் தேதிக்குள் செலுத் தப்பட்டிருக்க வேண்டும். எனவே, வரி பாக்கி, கட்டணங்களை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள் ளோர் உடனடியாக நிலுவையின்றி செலுத்த வேண்டும். பொதுமக்களின் வசதிக்காக அனைத்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை களிலும் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையங்கள் இயங்கும். உரிய காலத் தில் வரி, கட்டணங்கள் செலுத்தாதவர்களின் குடிநீர், புதைச் சாக்கடை இணைப்பு துண்டிக் கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, ஜப்தி நடவடிக்கை மற்றும் சட்டரீதியாகவும் நிலு வைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என தெரிவிக்கப் பட்டுள்ளது.
குடியிருப்பு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
நாமக்கல், ஜன.31- திருச்செங்கோட்டில், குடியி ருப்பு பகுதி அருகே கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு - ஈரோடு சாலை, கூட்டப் பள்ளி பகுதியில், 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர், வீட்டு வசதி வாரிய குடியி ருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புக்கு அருகே 12 ஏக்கர் அளவில் கூட்டப்பள்ளி ஏரி அமைந்துள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு கூட்டப்பள்ளி ஏரியின் கரை கள் உடைந்ததால், ஏரியானது குப்பை கொட்டும் கிடங்காக மாற் றப்பட்டது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, ஏரியில் நகராட்சியின் குப்பைகள் கொட்டுவது நிறுத்தப் பட்டது. இந்நிலையில், திருச்செங் கோட்டில் உள்ள கழிவுநீர் கால்வா யில் வரும் கழிவுநீர் கூட்டப்பள்ளி ஏரியில் கலக்கிறது. இதனை கருத் தில் கொண்டு, நகராட்சி நிர்வா கம் கூட்டப்பள்ளி பகுதியில் சுமார் ரூ.36 கோடி செலவில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்ட வரையறை மேற்கொள்ளப் பட்டு, அதனை கடந்த சில நாட்க ளுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆய்வு செய்தார். குடியிருப்பு பகுதி அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந் தால், நிலத்தடி நீர் பாதிக்கப்படும். மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படும். எனவே, கூட்டப்பள்ளி ஏரியை தூர் வாரி, அதனை நீர் நிலையாக மாற்ற வேண்டும், என வலியுறுத்தி, அப் பகுதி பொதுமக்கள் வியாழனன்று திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது, முறையான அனு மதி இல்லாத நிலையில் போராட் டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற காவல் துறையின ருடன் போராட்டக்காரர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால், கைது நட வடிக்கை கைவிடப்பட்டது. இதை யடுத்து திருச்செங்கோடு வரு வாய் கோட்டாட்சியர் சுகந்தி, நக ராட்சி பொறியாளர் சரவணன் ஆகி யோரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து போராட்ட ஒருங் கிணைப்புக்குழுவினர் கூறுகை யில், பல்வேறு கட்ட போராட்டங் களுக்கு பிறகு, கூட்டப்பள்ளி ஏரி யில் குப்பை கொட்டுவது நிறுத் தப்பட்டது. தற்போது, கழிவுநீர் சுத் திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்து, இடத்தை பார்வையிட்டு வருகின்றனர். ஓடை புறம்போக்கு பகுதியில் எந்த கழிவுநீர் திட்டமும் வரக்கூடாது என அரசாணை இருந் தும், நகராட்சி நிர்வாகம் இது போன்று செய்து வருகிறது. மாறாக, ஏரியை தூர்வாரி சுத்தமான நீர் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
சமூக நீதிப் பயிலரங்கு சிக்கண்ணா மாணவர்கள் தேர்வு
சமூக நீதிப் பயிலரங்கு சிக்கண்ணா மாணவர்கள் தேர்வு திருப்பூர், ஜன.31- மாநில அளவிலான பயிலரங்கத்தில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்ட னர். மாநில இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் ஜன.31 முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் சமூக நீதிக்கான இளைஞர்கள் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பல் கலைக்கழகங்களில் இருந்து 255 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு - 2 சார்பாக ராஜீவ் (விலங்கியல் துறை) மற்றும் பிர வீன் (வணிகவியல் துறை) ஆகிய இரண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை வியாழனன்று கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், அலகு - 2 ஒருங்கிணைப்பா ளர் மோகன்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவி கள் வழியனுப்பி வைத்தனர்.
சைவக் கோவிலாக மாற்றும் முயற்சி
சைவக் கோவிலாக மாற்றும் முயற்சி அவிநாசி, ஜன.31- ஆகாசராயர் கோவிலை சைவக்கோவிலாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என முற்போக்கு அமைப்பி னர் வலியுறுத்தி உள்ளனர். அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சியில், பழமை வாய்ந்த ஆகாசராயர் கோவில் உள்ளது. பல்வேறு சமூகத்தினரும் வழிபடும் இக்கோவிலுக்கு சுற்றிச்சுவர் எழுப் பப்பட்டு வருகிறது. இது சமூக வேறுபாட்டை உருவாக்கும் என்கிற விமர்சனம் எழுந்து வருகிறது. இந்நிலையில், தலித், முற்போக்கு அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோ சனைக் கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இதில், ஆகாச ராயர் கோவிலில் கிடாய் வெட்டி பொங்கல் வைத்து வழி பாடு செய்வது வழக்கமாக உள்ளது. இதனை தடுக்கும் வகை யில் சைவ கோயிலாக மாற்றும் முயற்சியின் ஒருபகுதியாக சுவர் எழுப்புவதாகவும், இதனை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உள்ளிட்ட முக்கியத்துறைகளுக்கு மனு அனுப்புவது என முடிவெடுக் கப்பட்டது.
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: மாவட்ட ஆட்சியரிடம் புகார்
திருப்பூர், ஜன.31- பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்த நிறுத்தக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ் நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இரா.ச.முகிலன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு செயல்பாட்டாளர்கள் மீது தமி ழகம் முழுவதும் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வரு கிறது. பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோத கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும். கல்குவாரிகளுக் காக சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் வெடி மருந்து களை தடுக்க வேண்டும். கல்குவாரி எதிர்ப்பு செயல்பாட் டாளர்கள், பத்திரிகையாளர், மீது நடைபெறும் தாக்குதல் களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஈரோடு சட்டமன்ற இடைத்தேர் தலில் பரப்புரை செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் வாங்கிய நகை அடமான கடனுக்கு அசல், வட்டியை மொத்தமாக செலுத்த நிர்பந்தம்: விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
திருப்பூர், ஜன.31- தேசியமய மாக்கப்பட்ட வங்கிக ளில் வாங்கிய நகை அடமானக் கட னுக்கு அசல் மற்றும் வட்டியை மொத்தமாக செலுத்த வேண்டும் என்று நிர்பந்தம் செலுத்தக் கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மாதாந்திர குறைதீர் கூட்டம் வெள் ளியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப் பூர் மாவட்டத்தில் தேசியமயமாக் கப்பட்ட வங்கிகளில் நகைக் கடனை வட்டியை செலுத்தி மீண்டும் புதுப் பிக்கும் நிலை உள்ளது. ஆனால் சமீப நாட்களாக விவசாயிகள் அட மானம் வைத்த நகைகளுக்கு மொத்த அசல் மற்றும் வட்டியை முழுமையாக செலுத்த வேண்டும் என்று வங்கிகளில் கூறுகின்றனர். தற்போதைய நெருக்கடியான நிலை யில் முழுத் தொகையை செலுத்தி விட்டு மீண்டும் புதிதாக கடன் பெற வேண்டும் என்று சொல்வது விவ சாயிகளுக்கு நெருக்கடி ஏற்படுத் தும். 4 சதவீத வட்டியில் பயிர்க்கடன் தருவதில்லை என்ற நிலையில் விவ சாயிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே தேசியமயமாக்கப்பட்ட வங் கிகளில் நகைக் கடன் ஏற்கனவே இருக்கும் நடைமுறையை தொடர வேண்டும். மேலும், ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ரயிலடி, கவுண்டம் பாளையம் நால்ரோடு, மற்றும் கூனம்பட்டி, பள்ள கவுண்டம்பாளை யம், நடுப்பட்டி தேசிய நெடுஞ் சாலை, கோபி படியூர் சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும். திருப்பூர் உழவர் சந்தைக்கு நள்ளிரவு, அதிகாலை நேரத்தில் காய்கறிகளை கொண்டு வரும் விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாரை உழவர் சந்தைக்கு அருகிலேயே நிறுத்தி வாகன சோதனை செய்வது என்று காவல் துறையினர் துன்புறுத்துவதை கைவிட வேண்டும். அண்மையில் பல்லடத்தில் இருந்து காய்கறி கொண்டு வந்த விவசாயியை உழ வர் சந்தைக்கு முன்பாகவே சோதனை செய்து குடிபோதை யில் இருந்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துடன் அவர் கொண்டு வந்த காய்கறிகளையும் சுமார் ஒரு வாரம் வரை விற்க முடி யாமல் கடும் இழப்பை சந்தித்தார். எனவே காவல்துறையின் நடவடிக் கையை கைவிட வேண்டும். அத்துடன் ஆவின் கொள்முதல் செய்யும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. கடந்த அக்டோபர் மாதம் அதை நிறுத்தி விட்டனர். மீண்டும் பாலுக்கு ஊக்கத் தொகையை நிலுவை இல்லாமல் தொடர்ந்து வழங்க வேண்டும். ஊத்துக்குளி தாலுகாவில் அத்திக்கடவு - அவி நாசி திட்டத்தில் இணைக்கப்பட் டுள்ள குட்டைகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். குறிப்பாக செங்கப் பள்ளி அவரக்கரை பள்ளத்தில் பெருமளவு சீமை கருவேல மரம் வளர்ந்துள்ளதால் அத்திக்கடவு திட்டத்தில் வரும் தண்ணீர் தேங்கு வது பாதிக்கப்படுகிறது. எனவே சீமை கருவேலம் மரங்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் விவசாயி கள் சங்க மாவட்ட துணைத் தலை வர் எஸ்.பரமசிவம் அளித்த மனு வில், உடுமலைப்பேட்டை ஆண்டிய கவுண்டனூர் பகுதியில் செயல்ப டும் பன்னாட்டு கோழி பண்ணை, அதற்கு அருகில் இருக்கும் 23 ஏக் கர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மீட்டு ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்து வழங்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டிருக் கிறார்.
குண்டும், குழியுமான சாலைகளும், அலங்கார வேலையும்
உடுமலை, ஜன.31- உடுமலை - மூணாறு, அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி மலைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ள நிலையில், அதனை சரிசெய்யா மல் சாலையில் அலங்காரம் செய்வதில் ஆர்வம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடுமலை - மூணாறு சாலை, செங் குளம் பகுதியில் வளைவான சாலை யால் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் உடுமலை திருப்பதி கோவில் முதல் சுடலை ஆண் டவர் கோவில் வரை சாலையை அகலப் படுத்தி விபத்துகளை தவிர்க்கும் வகை யில் வாகனங்கள் ஒருபுறமாக செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கும் வேலை நடைபெற்றது. அதே போல் அதே சாலையில் போடிபட்டி ஊராட்சி பகுதியான பெரியகுளம் பகுதியில் ரவுண்டாண அமைக்கும் வேலை நடை பெற்றது. தற்பொழுது ரவுண்டானவில் யானை, மான் உள்ளிட்ட அழகு சிலை கள் பொருத்தப்பட்டுள்ளன. பொது மக்கள், வர்த்தக நிறுவனங் கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக மாக பயன்படுத்தும் இந்த சாலையை முறையாக பரமரிப்புகள் செய்யாமல் குண்டும், குழியுமாக உள்ளது. குறிப் பாக தொடர் விபத்து ஏற்படும் பகுதி யாக மடத்தூர் பிரிவு பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. சேதம டைந்த சாலையை சரி செய்யாமல், அப் பகுதியில் அலங்கார வேலைகள் மட் டும் நடைபெற்று வருகிறது. தனியா ருக்கு சாதகமாக இப்பணிகள் நடை பெறுவதாக, அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். தொடர் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பல லட்சம் செலவுகள் செய்து சாலை விரிவாக்க வேலைகள் தொடங் கியது. ஆனால், செங்குளம் பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான உடுமலை திருப்பதி கோவிலுக்கு செல் லும் வகையில் சாலை தடுப்புகளை அமைக்காமல் சிறப்பு வழி ஏற்படுத்தி உள்ளனர். நெடுஞ்சாலை துறை அதிகா ரிகள் தனியாருக்கு சாதகமாக மீண்டும் விபத்து ஏற்படுத்தும் வகையில் வேலை செய்வது ஏன் என்று தெரியவில்லை. தொடர் விபத்துகளை தடுக்கும் வகையில் போடிபட்டி ஊராட்சி பெரிய குளம் பிரிவு பகுதியில் சாலையை விரி வாக்கம் செய்து ரவுண்டாணவும் செங் குளம் பகுதியில் இருக்கும் சாலை வளைவுகளை சரி செய்து விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஒரு வழிச்சாலை வழியாக வாகனங்கள் செல்ல தடுப்பு அமைக்கப்பட்டது. இதற் காக, 40 க்கும் மேற்பட்ட பல ஆண்டு பழமையான மரங்களை அகற்றி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், இப்பணிகள் அணைத்தும் வீண் என்கிற வகையில், மீண்டும் விபத்துகளை ஏற்ப டுத்தும் வகையில் உடுமலை திருப்பதி கோவிலுக்கு வழிவிடும் வகையில் தடுப்பு அமைக்காமல் உள்ளது விமர்ச னத்தை உருவாக்கி உள்ளது. அதே சாலையில் குடியிருப்பு பகுதிகள், வணிக நிறுவனம் மற்றும் பழமையான கோவில் கள் இருந்தும், அங்கெல்லாம் வழி விடா மல், சட்டத்தை அமல்படுத்திய நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள், ஒருதரப்பி னருக்கு மட்டும் சிறப்பு வழி ஏற்படுத்தி யது உள் நோக்கம் கொண்டது என்கிற குற்றச்சாட்டுக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்தான் பதில் கூற வேண் டும்.
திருப்பூரில் தெரு விளக்கு, குப்பை, சாக்கடை பிரச்சனை:
மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரி புகார்
திருப்பூர், ஜன.31– திருப்பூர் மாநகராட்சியில் எரியாத தெரு விளக்குகள், தேங்கிக் கிடக்கும் குப்பை களை அள்ளுவதில் தாமதம், சாக்கடை கால் வாய்களைத் தூர்வாருவதில் தாமதம் என பல்வேறு பிரச்சனைகள் குறித்து மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாகப் புகார் தெரிவித்தனர். திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட் டம் மேயர் ந.தினேஷ்குமார் தலைமையில் ஆணையர் எஸ்.ராமமூர்த்தி, துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நான்கு மண்டலத் தலைவர்கள் உள்பட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். இதில் கூட்டம் தொடங்கியவுடன் கடந்த 60 நாட்களில் நடைபெற்ற பணிகள் குறித்து மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மண்டலத் தலைவர் இல.பத்ம நாபன் பேசத் தொடங்கியபோது, அதிமுக கவுன்சிலர்கள் மேயரிடம் சென்று கோரிக்கை மனுக் கொடுத்து சொத்து வரி ரத்து குறித்து பேசினர். பின்னர் வெளிநடப்பு செய்வதாகக் கூறி வெளியேறினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் எஸ்.ரவிசந்திரன், திருப்பூரில் சொத்து வரி உயர்வு குறித்து எம்.பி., எம்.எல்.ஏ., மேயர் ஆகியோர் முதல்வரிடம் கோரிக்கை வைத்து மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்துள் ளதால், சொத்து வரி உயர்வை நிறுத்தி வைக்க தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கோரினார். ஆனால் சொத்து வரியை குறைப் பது குறித்து பரிசீலித்து முதல்வர் அறிவிப்பார் என்பதால், அரசின் வழிகாட்டுதல்படி செயல் பட முடியும் என்று மேயர் பதிலளித்தார். இதைத் தொடர்ந்து அரசியலுக்காகத் தவ றான பிம்பம் உருவாக்க வேண்டாம் என சொன்ன மேயருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவா தம் ஏற்பட்டது. தீர்மானம் நிறைவேற்ற வலியு றுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சி லர்கள் வெளிநடப்பு செய்தனர். திருப்பூருக்கு மட்டும் சொத்துவரி உயர்த்தப்பட்டிருப்பதாக சொல்வது தவறு, அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி களுக்கு மாநில அரசின் உத்தரவின்படிதான் சொத்து வரி உயர்த்தப்பட்டது. திருப்பூரில் மொத்தம் 2 லட்சத்து 74 ஆயிரம் சொத்து வரி விதிப்புகள் உள்ளன. இதில் 4197 சொத்து வரி விதிப்புகளுக்கு மட்டுமே உயர்த்தப்பட் டுள்ளது. மற்றபடி ஆண்டுக்கு 6 சதவிகித உயர்வு ஒன்றிய அரசின் நிர்பந்தத்தில் கொண்டு வரப்பட்டது. பழைய கட்டிடங்க ளுக்கு புதிதாக அளவீடு செய்து வரி விதிப்பு செய்யவில்லை. பழைய கட்டிடங்களில் கூடு தலாக கட்டப்பட்டிருந்தால், அவற்றுக்கு மட் டுமே தற்போதைய வரி விதிக்கப்படுகிறது. பழைய கட்டிடங்களுக்கு புதியவரி விதிக்கப் படவில்லை என்று மேயர் தினேஷ்குமார் தெரி வித்தார். இக்கூட்டத்தில் பேசிய மண்டலத் தலை வர்கள், மண்டலங்களுக்கு ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு என்பது போதுமானதல்ல, இதில் பணிகள் செய்ய ஒப்பந்ததாரர்கள் முன்வருவ தில்லை. எனவே அந்த நிதியை கூடுதலாக வழங்க வேண்டும் என்றனர். மூன்றாவது மண் டலத்தில் எந்த அதிகாரியும் எந்த வேலை யும் செய்வதில்லை, எனவே தனியாக ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் என்று மண்டலத் தலைவர் கோவிந்தசாமி கூறினார். திங்களன்று கூட்டம் நடத்தலாம் என மேயர் பதிலளித்தார். இக்கூட்டத்தில் பேசிய திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி கவுன்சிலர்கள், வீதிகளில் மட்டுமின்றி பிரதான சாலைகளில் கூட தெருவிளக்குகள் எரிவதில்லை. பழுது நீக்க அழைத்தாலும் யாரும் வருவதில்லை என்று சரமாரியாகக் குற்றம் சாட்டினர். தெரு விளக்குப் பராமரிப்பு பணி செய்யும் ஒப்பந் ததாரர்களையும் கூட்டத்தில் வரவழைத்தி ருந்த நிலையில் கவுன்சிலர்கள் பலரும் அவர் களிடம் கேள்வி எழுப்பினர். ஆட்கள் பற்றாக் குறை இருப்பதுடன், பொருட்கள் வர வில்லை என்றும், தரமில்லாத பொருட்க ளைக் கொண்டு வேலை செய்வதாகவும் கூறப்பட்டது. தெரு விளக்குப் பராமரிப்பு பணியை கண்காணித்து புகார்களை சரி செய்ய பொறுப்புள்ள அதிகாரிகளை நிய மிக்க வேண்டும் என்றும் கோரினர். இதேபோல் குப்பை அள்ளுவது, கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்துவது, குடிநீர் குழாய் அமைப்பது, கசிவுகளை சீரமைப்பது என அன்றாட அடிப்படை பணிகளை ஒப்பந்தம் எடுத்திருக்கும் நிறுவனத்தினர் முறையாக செய்வதில்லை. கவுன்சிலர்களிடம் தகவல் சொல்வதில்லை, பதிலளிப்பதில்லை என்று கவுன்சிலர்கள் சரமாரியாகப் புகார் கூறினர். மின்சார வாரியமும் தாமதம் செய்வது குறித்து தெரிவித்தனர். 53ஆவது வார்டு கவுன்சிலர் மணி மேகலை, நொச்சிபாளையம் பகுதியில் தேங் கும் கழிவுநீரை சுத்தப்படுத்தித் தர பல முறை கோரியும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறினார். இது மாநில நெடுஞ்சாலைத் துறைக்குரியது. நிதியில்லை என வேலை செய்யாமல் இருக்கின்றனர். கடிதம் அனுப்பி யிருக்கிறோம் என மேயர் சொன்னார். திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் கட் டப்பட்டு திறப்பு விழா செய்தும் மாநாட்டு அரங்கம் இன்னும் திறக்கப்படாமல் இருப் பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சி லர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் தனியார் ஒப்பந்தத்தாரர்களிடம் விடாமல் நேரடியாக மாநகராட்சி கட்டுப்பாட்டிலேயே வைத்தி ருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.