tamilnadu

தமிழ்நாட்டை புறக்கணித்த ஒன்றிய பாஜக அரசு

ஒன்றிய பாஜக அரசின் 2025-26ஆம் நிதியாண்டிற் கான பட்ஜெட், வழக்கம்போல முதலாளிகளுக்கு சாதகமான மற்றும் ஏழை மக்க ளுக்கு எதிரான பட்ஜெட் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்  விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக திருவாரூரில் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு இல்லை

நிதிநிலை அறிக்கையானது, வழக்கம்போல் ஏழை  மக்களுக்கு எதிராகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சி கள் ஆளுகின்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் புறக்க ணிக்கப்பட்டுள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு நிதி ஒதுக்கவேண்டுமென தொடர்ச்சியான கோரிக்கைகள் விடுக்கப்பட்டும், அதை தொடங்கு வதற்கான எவ்வித நிதியும் ஒதுக்கீடும் செய்யப்பட வில்லை. 

மெட்ரோ 2-ஆம் கட்டத்திற்கும் கைவிரிப்பு

அதேபோல் தமிழக முதல்வர் மெட்ரோ 2 திட்டத்துக்கு  நிதி ஒதுக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளார். அந்த திட்டத்  துக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நிதி ஒதுக்கீடு  விசயத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் என்பது இன்னமும் தொடர்கிறது. அதேநேரம்,  தங்களை ஆதரிக்கும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு  கூடுதல் திட்டங்கள், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

தேர்தலுக்காகவே வருமான வரி சலுகை

நிதிநிலை அறிக்கையில் வருமானவரித்துறையில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு கிறது. தில்லி  உள்ளிட்ட மாநிலங்களில் வருகின்ற  5 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற விருக்கிறது. மத்திய தர மக்களின் வாக்குகளை பெறு வதற்காகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டி ருக்கிறது. வருமானவரித்துறை குறித்து ஒரு புதிய சட்டம் இயற்றப்படும் என அறிவித்திருப்பதன் மூலம் வாக்குகளை பெறுவதற்கான அறிவிப்பு என்பது தெளி வாகிறது.

வேலைவாய்ப்புக்கான திட்டங்கள் இல்லை

வேலையின்மையை போக்குவதற்கான எந்த வித  அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.  வேலையின்மை என்பது இந்தியா மட்டுமின்றி உலக  அளவில் பெரும் பிரச்சனையாக இருக்கிறபோது, அதை  போக்கும் வகையிலான நடவடிக்கைகள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. மாறாக, கிராமப்புறங்களில் 100 நாள் திட்டத்துக்கு கடந்தாண்டு வழங்கப்பட்ட அதே  ரூ.86 ஆயிரம் கோடியை திரும்பவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செம்மைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக பலரும் விடுத்து வருகிறபோது, கூடுதல் நிதி ஒதுக்கப் படாதது கிராமப்புறங்களில் கடுமையான வறுமையை அதிகப்படுத்தும்.

உர மானியம், எரிபொருள் மானியங்களில் வெட்டு

அதேபோல், கடந்தாண்டு விவசா யத்துக்கு ஒதுக்கிய உர மானியம் ரூ. 3600 கோடி, பெட்ரோலியப் பொருள்களுக்கான மானியம் ரூ. 2200 கோடி ஆகியவை வெட்டப்பட்டுள்ளன. இது விவசாயத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இந்தி யாவில் பல மாநிலங்களில் டீசல் இன்ஜினை பயன்படுத்தி விவசாயம் நடைபெற்று வரு கிறது. இதனால், பெட்ரோல், டீசல் பொருள் கள் விலை உயர்ந்து விவசாயத்தில் பெரு மளவு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படவில்லை.  90 சதவிகித மக்களுக்கு  எதிரான பட்ஜெட் மொத்தத்தில் ஏழைகளுக்கு எதிராகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான நிதிநிலை அறிக்கையாக உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையால் விலைவாசி உயரும், வேலையின்மை அதிகரிக்கும், இந்தியாவில் உள்ள 90 சதவீத மக்களை பாதிக்கக்கூடிய நிதி நிலை அறிக்கையாக உள்ளது ஆகவே இந்த பாரபட்சத்தை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் பட்ஜெட் கண்டன ஆர்ப்பாட்டம் கட்சியின் சார்பாக மாநிலம் முழுவதும் நடைபெறும். இவ்வாறு பெ. சண்முகம் தெரிவித்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் டி.முருகை யன், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாக ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. சுந்தரமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.