கோவை, பிப்.1- சூலூர் அருகே இலவச வீட்டு மனை பட்டா வேண்டி பொதுமக்கள் மயானத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை, சூலூர் அடுத்த நல்லூர் பாளை யம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும் பங்கள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்துறை யினரிடம் மனு அளித்து வருகின்றனர். அப் பகுதியில் உள்ள 19.36 ஏக்கர் பரப்பளவில் உள்ள மயான இடத்தில் ஐந்து ஏக்கர் போக மீதமுள்ள இடத்தை பொதுமக்கள் பயன்பாட் டுக்கு வீட்டுமனை பட்டாவாக தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இந்த தீர்மானம் நகல் கோட்டாச்சியருக்கு அனுப்பப்படவில்லை என்பதை அறிந்த, இப்பகுதியினர் வெள்ளி யன்று வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தித்து முறையிட்டனர். அதில் உடன்பாடு எட்டப் படாத நிலையில், வெள்ளியன்று மாலை மயா னத்தில் குடியேறி காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சுல் தான்பேட்டை போலீசார் மற்றும் வதம்சேரி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர், போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இரவு 9 மணி வரை நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.