districts

முப்பெரும் பேரலைகள் வள்ளுவன், கம்பன், பாரதி புத்தகத் திருவிழா கருத்தரங்கில் புகழாரம்

திருப்பூர், பிப்.1 - தமிழ் இலக்கிய உலகில் முப்பெ ரும் பேரலைகளாக வள்ளுவன், கம் பன், பாரதி இருக்கின்றனர் என்று பாரதி தாசன் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் உ.அலிபாவா கூறினார். திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வெள்ளியன்று நடைபெற்ற 9ஆம் நாள்  கருத்தரங்கில் அணையா விளக்கு என்ற தலைப்பில் முனைவர் உ.அலிபா வா பேசியதாவது: உலகில் 7500 மொழி கள் உள்ளன. அதில் ஐந்தாறு மொழி கள் செவ்வியல் மொழிகளாகும். அதில்  தமிழ் செவ்வியல் மொழியாகத் திகழ்கி றது. தமிழர் பேரறிவின் கருவூலம் தொல்காப்பியம். மனித வாழ்க்கைக்கு  இலக்கணம். இறவாத புகழ் கொண்டது. யாதும்  ஊரே யாவரும் கேளிர் எனும் தமிழ் புல வனின் சொல், ஐக்கிய நாடுகள் சபை யின் முன்பாக உள்ளது. இப்பாடல் தோன்றிய இடம் தற்போது கேரள  மாநிலத்தில் உள்ள முசிறி. அங்குள்ள  துறைமுகத்தில் பல நாட்டு வணிகர்கள்  வந்து செல்வதைப் பார்த்து கனியன்  பூங்குன்றனார் இப்பாடலை எழுதியி ருக்கலாம். இலக்கியங்களைத் தேடித்  தேடிப் படிக்க வேண்டும். மேலை நாட்டு  இலக்கியங்களை விட சங்கத் தமிழ்  இலக்கியங்கள் உயர்ந்து நிற்கின்றன.  எல்லா மதமும் உரிமை கொண்டாடக் கூடிய மதம் கடந்த நூல் திருக்குறள். பேரலைகள் என்பவை கடலில் எப் போதாவது வரும். ஆனால் அவை  மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.  அது போல் தமிழில் மூன்று பேரலைகள்  வந்துள்ளன.ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க இலக்கியம் பெற்றெடுத்த வள்ளுவன் முதல் பேரலை. அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் புதிய கவி ஊற்றாகப் பொங்கி எழுந்த கம்பன்  இரண்டாவது பேரலை. நெப்போலிய னின் நூலகத்தில் இருக்கும் ஒரே தமிழ்  நூல், கம்ப ராமாயணம். நவீன கவிதை களுக்கு வித்திட்டவன் கம்பன்.  அடுத்த ஆயிரம் ஆண்டுகள் கழித்து தங்க விடியலாய் தழைத்த பாரதி. மூன்றாவது அலை. மூவருக் கும் என்ன வேறுபாடு? மனிதனை தெய் வம் ஆக்கினான் வள்ளுவன்.  நாம்  மறைந்தபோதும் பேசுகிற செயல்க ளால் சிறந்தவர்கள் தான் வாழ்வாங்கு  வாழ்வர் அதைச் சொன்னவன் வள்ளு வன். அதேசமயம் தெய்வத்தை மனித னக்கினான் கம்பன். மனிதனை அசல்  மனிதனாக்கிப் பார்த்தவன் பாரதி. இவர்களை விட்டால், ஏராளமான எழுத்தாளர்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். காலத்துக்கு ஏற்ப நூல்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும். அதை அடையாளம் கண்டு நாம் தேடிப் படிக்க வேண்டும். அன்னையின் மடியில் இருந்து மனி தன் மடிந்து அடையும் மண்ணரை வரை  நூல்கள் தேவை.செயல்களால் சிறந்த வர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்வை, வண்டுகள் தேன் எடுப்பது போல நாம் படிக்க வேண்டும் என்றார்  அலிபாவா, இந்த நிகழ்வில், குடியுயர கோன்  உயரும் என்ற தலைப்பில் தமிழ்நாடு  திட்டக்குழு செயல் துணைத் தலைவர்  பேராசிரியர் ஜெயரஞ்சன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நோபல்  பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன், இந்தியாவில் தமிழகம் தனித்து விளங் குவதாகக் கூறியிருக்கிறார். தமிழகம் நூறாண்டு கால அறிவார்ந்த பயணத் தின் விளைவாக இந்த நிலையை எட்டி யிருக்கிறது. கிராமம் தோறும் நூலகம்  இங்கிருப்பது போல் இந்தியாவில் வேறெங்கும் இல்லை. எல்லா ஊர்களி லும் புத்தக கண்காட்சி நடத்தப்படுகி றது. எல்லா பகுதிகளிலும் மக்கள் ஆயி ரக்கணக்கானோர் புத்தகக் கண்காட் சிக்கு வருகின்றனர். அரசின் துறைகளி லேயே அதிக செலவு பிடிக்கக்கூடிய துறை எது தெரியுமா? பள்ளிக்கல்வி துறை! அதற்குத் தான் மிகப் பெரிய செலவு. ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழகம் குறித்து குறிப்பிட்டிருக்கின்றனர். தோல் அல் லாத காலணிகள் பற்றிய ஆய்வு செய்து  அதன் உற்பத்தியில் தைவான் முன்ன ணியில் இருக்கிறது. அந்த தோல் அல் லாத காலணிகளை உற்பத்தி செய்ய இங்கு தொடங்கியிருக்கிறோம். இதன்  மூலம் வேலைவாய்ப்பு பெறாத  பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்க ளில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருகிறோம். 40 ஆயிரம் பெண்கள் வேலைவாய்ப்பு பெறுவர்.கற்றல் இடைவெளியை இட்டு நிரப்பத் தான் இல்லம் தேடி கல்வி திட்டம்  கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் உயர்கல்வி பெறும் பெண்கள் 26 சதவி கிதம். ஆனால் தமிழ்நாட்டில் அது  48 சதவிகிதம். பெண்கள் உயர்கல்வி  பெறுவதை இன்னும் ஊக்குவிக்கத் தான் ரூ.1000 மாணவிகளுக்கு வழங்கப் படுகிறது. தமிழகமும், கேரளமும் பட்டினி யற்ற சமூகமாக உள்ளன. இங்கு 99.7%  பட்டியற்றவர்கள். இதே மகாராஷ்டிரா,  குஜராத் 50% ஆக உள்ளது. வட  இந்தியாவில் இது 40 சதவிகிதமா கத்தான் உள்ளது. தொற்றும் நோய்களை விட தொற்றா நோய்களான ரத்த அழுத்தம்,  நீரிழிவு நோய், இதய நோய், புற்று  நோய் உள்ளிட்டவற்றால் அதிகம் பேர்  உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கத் தான் மக்களை தேடி  மருத்துவம் திட்டம்  செயல்படுத்தப்படுகிறது. இதில் 42 லட் சம் பேர் பயனடைந்துள்ளனர்.  தரமான வாழ்க்கைக்காக நாம் மேற்கொள்ளும் இப்பணிகள் கடந்த 50  ஆண்டுகளாக உருவாக்கப்பட்டது. இது தான் குடியுயர கோன் உயரும்  என்பது என்று பேராசிரியர் ஜெய ரஞ்சன் கூறினார். முன்னதாக பிரேம் எம்.துரை சாமி தலைமை ஏற்றார்.  பா.சௌந்தர ராசன் வரவேற்றார். ஜே.ஆர்.எம்.பழ னிச்சாமி, குமார் துரைசாமி, கேரவன்  எஸ்.ஆறுமுகம், தாய் அறக்கட்டளை சுந்தரமூர்த்தி, 53ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.மணிமே கலை உள்ளிட்டோர் முன்னிலை வகித் தனர். திரளானோர் கலந்து கொண்ட னர். பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் எம். மகேஷ் நன்றி கூறினார்.