திருப்பூர், பிப்.1 - திருப்பூர் பி.என்.சாலையில் சாலை ஓரத்தில் மலைப் போல் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. 10க்கும் மேற் பட்ட குடிநீர் பைப் லைன்கள் செல்லும் இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள் ளது என புகார் எழுந்துள்ளது. தினதோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் சாலை பிஎன் சாலை. பெருமாநல்லூர் ஊராட் சிக்கு உட்பட்ட பாரதிநகர் பாலம் அருகே மலை போல் குப்பைகள் கொட்டப்பட் டுள்ளது. இவ்வழியாக செல்லும் வாக னங்கள் மீது குப்பையில் இருந்து காகி தங்கள் பறந்து விழுகிறது. மேலும், கடும் துர்நாற்றம் வீசுகிறது என புகார் எழுந் துள்ளது. இதுகுறித்து பாரதி நகர் மக்கள் கூறு கையில், தினந்தோறும் ஆயிரக்கணக் கான வாகனங்கள் சென்று வரும் இச் சாலையில் ஓரத்தில் குப்பைகள் கொட் டப்பட்டுள்ளது. இதன் உள்ளே மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும், பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், பொங்குபாளையம் ஊராட்சிக்கு உட் பட்ட 10க்கும் மேற்பட்ட குடிநீர் பைப் லைன்கள் இவ்வழியாக செல்கின்றன. குடிநீர் குழாய் ஏதேனும் பழுது ஏற்பட் டால் அதை சரி செய்ய வரும் ஆட்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குப்பையில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை கால்நடைகள் உண்பதால் நோய்த்தொற்றுக்கு உள்ளாகின்றன. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்தி டம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இங்கு குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தட்டி வைத்தனர். இருப்பினும் குப்பைகள் கொட்டப்படுவது நிற்கவில்லை, தொடர்கிறது என தெரிவித்தனர்.