districts

img

அம்மையநாயக்கனூரில் தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை

சின்னாளப்பட்டி,மார்ச் 7- திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடை பெற்றது, கூட்டத்திற்கு தலைவர் எஸ்பி.செல்வராஜ் தலைமை வகித்தார், துணைத் தலைவர் விமல்குமார் முன்னிலை வகித்தார், சுகாதார ஆய்வாளர் செந்தில் குமார் வரவேற்றார், கூட்டத்தில் கொடைரோடு பேருந்து நிலையத்தில் உள்ள தரை வாடகை கடைகளை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு திறந்தவெளி பொது ஏலம் விட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்,தொடர்ந்து கோடைகாலம் துவங்கிய நிலையில் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும், தடையின்றி குடிநீர் கிடைக்கவும், அனைத்து வார்டுகளுக்கும் சமமான நிதி பகிர்ந்தளித்து அடிப்படை பணிகள் அனைத்தும் போர்க்கால அடிப்ப டையில் செய்யப்பட்டு வருவதாக பேரூராட்சி தலைவர் அறிவித்தார், தலைமை எழுத்தர் விவேக் நன்றி கூறினார்.