அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மூதாட்டியின் நகையை திருடியவர் கைது
தேனி ,மார்ச்.7- தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த மூதாட்டியின் 4 பவுன் தங்க செயினை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர் . போடி அருகே உள்ள எஸ்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி கமலம். 82 வயதான மூதாட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்பு லன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட நிலையில், சிகிச்சை க்கு கொண்டு வரும் வழியிலேயே மூதாட்டி உயிரிழந்தார். இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவு 802 வது அறையில் பரிசோதித்த மருத்துவர்கள், மூதாட்டி உயிரிழந்ததாக தெரிவித்தனர் .அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டியின் உடலில் இருந்த 4 பவுன் தங்க செயின் திருடு போனது. இதையடுத்து உடலில் இருந்த செயின் காணாமல் போனதையறிந்து அதிர்ச்சி அடைந்த கமலம் என்பவரின் மருமகன் ரவிச்சந்திரன் க.விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் சிகிச்சை அறை யில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, உறவினரின் சிகிச்சைக்காக வந்த, தேனி வளை யப்பட்டி பகுதியை சேர்ந்த நந்தினி என்பது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாகி இருந்த நந்தி னியை க.விலக்கு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரயில் நிலைய காலியிடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி
மதுரை, மார்.7- ரயில் கட்டணம் இல்லாத வருமா னத்தை பெருக்கும் வகையில் சாத்தூர், பாளையங்கோட்டை, நாசரேத், மற்றும் போடிநாயக்க னூர் ரயில் நிலையங்களில் உள்ள அளவுக்கு அதிகமான காலியி டங்களை உரிய கட்டணத்துடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சாத்தூர் ரயில் நிலையத்தில் 12,250 சதுர அடியும், பாளை யங்கோட்டை ரயில் நிலையத்தில் 15,070 சதுர அடியும், நாசரேத் ரயில் நிலையத்தில் 64,583 சதுர அடியும் போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தில் 1,614 சதுர அடியும் கொண்ட காலி இடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட உள்ளது. இந்த காலி யிடங்கள் ரயில் நிலைய நுழை வாயிலுக்கு முன்பாக உள்ள வெளி வளாக பகுதிகளாகும். இதில் திரு மணம், பிறந்தநாள் கொண்டாட்டம், சிறிய குடும்ப விழாக்கள், தனி பயிற்சி கல்லூரி, பயிற்சி பள்ளிகள், விளையாட்டு பயிற்சி மையங்கள், யோகா, தியானம், நடைப்பயிற்சி, குறு ஓட்ட பயிற்சி, சிரிப்பு மன்றங்கள் போன்ற ஆரோக்கியம் சம்பந்தமான நிகழ்வுகள், போட்டி கள், பரிசளிப்பு விழாக்கள், பள்ளி ஆண்டு விழாக்கள், புத்தக மற்றும் ஓவிய கண்காட்சிகள் நடத்தலாம். இதற்காக விருப்ப மனுக்கள் கோரப்பட்டுள்ளன. இது சம்பந்த மாக மேலும் விவரங்கள் அறிய மதுரை கோட்ட ரயில்வே அலுவல கத்தில் மார்ச் 14 அன்று காலை 11 மணிக்கு நேருக்கு நேர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். இதில் கலந்துகொண்டு அந்த காலி இடத்தை பயன்படுத்த வேறு சில புதிய திட்டங்களையும், ஆலோச னைகளையும் தெரிவிக்கலாம். விருப்ப மனுக்களை srdcm@mdu.railnet.gov.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்ப லாம். இது சம்பந்தமாக மேலும் விபரங்கள் அறிய 9003862967 இந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
உணவக உரிமையாளர்கள் துணிப்பை உபயோகிப்பதை ஊக்குவிக்க வேண்டும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
விருதுநகர், மார்ச்.,7- உணவக உரிமையாளர்கள் துணிப்பை உபயோகிப்பதை ஊக்குவிக்க வேண்டு மென மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவிததார். விருதுநகரில் உணவக உரிமையாளர்க ளுக்கு “காலநிலை மாற்றத்தில் உணவுப் பொட்டலக் கழிவுகளின் தாக்கம் மற்றும் அதற்கான தீர்வுகள்“ என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சி யர் ஜெயசீலன் கூறியதாவது : ஒவ்வொருவரும் தினசரி நூறு கிராம் அளவிற்கு குப்பைகளை உருவாக்கி வருகிறோம். அதில், நாம் அன்றாடம் பயன் படுத்தி விட்டு, அதை அப்படியே தூக்கி எறியும் பொருள்களாக நவீன வாழ்க்கை முறை மாறிவிட்டது. நாம் வாங்கும் உணவுப் பொட்டலங்களில் ஒரு முறை மட்டும உபயோகப்படுத்தும் பொருட்கள் அதிகமாக உள்ளது. இந்நிலையில், உணவகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் திடக்கழிவு மேலா ண்மை எப்படி கையாள வேண்டும் என்ற சட்ட விதிகள் உள்ளது. குப்பைகள் ஒரு வீட்டில் உருவாகும் போது அதை மேலாண்மை செய்வதற்கு அவ் வீட்டின் உரிமையாளருக்கு பொறுப்பு கள் உள்ளன. நாம் சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியக்கூடிய நெகிழியை எரித்தால், அதனால் வரும் புகையால் மோசமான வாயுக்கள் வெளியேறும். இதனால், நமது நுரையீரல் பாதிக்கும். காற்றில் மாசு எற்படுவதோடு, புற்று நோய் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நீர்நிலைகளும் பிளாஸ்டிக் கழிவு களால் மாசடைகிறது. நாம் வாழக்கூடிய பூமியை நாமே மிக மோசமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். எனவே, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழியின் பயன் பாட்டை குறைக்க வேண்டும். உணவு நிறுவனங்கள், துணிப்பைகள் உபயோகிப்பதை ஊக்குவிக்க வேண்டும். உணவக உரிமையாளர்கள், தங்களது கடைகளில் சுற்றுச்சூழல்களுக்கு தீங்கு விளைவிக்கும் நெகிழிப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. பெரிய நிறுவனங்கள் திடக்கழிவு மேலாண்மையை முறையாக கையாள வேண்டும். குப்பைகளை மறுசுழற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், நேர்முக உதவியா ளர்(விவசாயம்) நாச்சியார் அம்மாள், உணவக உரிமையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
வார இறுதியில் 677 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை,மார்ச் 7- அரசு விரைவுப் போக்கு வரத்துக் கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இரு ப்பதாவது:- வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (மார்ச் 8, 9) சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்து தினசரி இயக்கப் படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்து களை இயக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர் ்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம் புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்க ளுக்கு வெள்ளிக்கிழமை (மார்ச்7) 265 பேருந்துகளும், சனிக்கிழமை (மார்ச்8) 270 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல, கோயம்பேட் டில் இருந்து திருவண்ணா மலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங் களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 51 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாதவரத்தில் இருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 20 பேருந்துகள் என ஆக மொத்தம் 677 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட வுள்ளன.
இன்று பொது விநியோக குறைதீர் முகாம்
திருநெல்வேலி மார்ச் 7- நெல்லையில் இன்று (சனிக்கிழமை) பொது வினி யோக திட்ட குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெறுகிறது. இதில் புதிதாக ரேசன் அட் டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் அட்டை, நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். மேலும் ரேசன் அட்டை யில் செல்போன் எண் பதிவு அல்லது மாற்றம் செய்து கொள்ளலாம். ரேசன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்க ளின் தரம் குறித்து புகார் அளிக்கலாம். முகாமில் ஆதார் அட்டை, பிறப்பு அல்லது இறப்பு சான்று. குடி யிருப்பு. முகவரிக்கு ஆதார மான ஆவணங்கள் ஆகிய வற்றை எடுத்து செல்ல வேண்டும். செல்போன் எண் பதிவு அல்லது மாற்றம் செய்வதற்கு ஏதுவாக சம் பந்தப்பட்ட செல்போனை கொண்டு செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்
நாகர்கோவில்,மார்ச் 7- முன்னாள் படைவீரர் மற்றம் அவரைச் சார்ந் ்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மார்ச் 17 அன்று காலை 9 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கன்னியாகுமரி மாவட் டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைக ளை உரிய விண்ணப்பமாக இரட்டை பிரதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.