தேனி ,மார்ச்.7- த மு எ க ச மாநில துணைத் தலைவர் தோழர் நந்தலாலா அவர்களின் மறைவினை ஒட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தேனி அல்லிநகரம் நகர் மற்றும் வட்டாரக் கிளைகள் சார்பாக தேனியில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ந. சேதுராமன் தலைமை தாங்கினார், கூட்டத்தில் மாவட்டத்தலைவர் இதய நிலவன், தேனி சீருடையான,ம.காமுத்துரை , அல்லி உதயன், மாநிலக் குழு உறுப்பினர் சுருளிப்பட்டி சிவாஜி, ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பா.ராமமூர்த்தி, விவசாய சங்க தலைவர் டி. கண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் இ.தர்மர், , சமுகநல்லினக்க பேரவை தலைவர், மூ.முகமது சபி, தேனி தமிழ் சங்க தலைவர் பொறியாளர் எஸ்.எஸ்.பொன்முடி, மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து பேசினர் . நிறைவாக மாவட்டச் செயலாளர் அய்.தமிழ்மணி உரையாற்றினார்.