world

img

இந்தியாவிற்கு தடை விதித்த பாஸ்கிஸ்தான்!

புதுதில்லி,ஏப்.24- இந்தியாவிற்குத் தடை விதித்து பாகிஸ்தான் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் உடனான சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்து 48 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானிகள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என இந்திய அரசு உத்தரவிட்டிருந்தது
இந்நிலையில் பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்களுக்குத் தடை விதித்து 48 மணி நேரத்திற்குள் இந்தியர்கள் பாகிஸ்தானிலிருந்து வெளியேறவும், மருத்துவ விசா மூலம் இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தானியர்கள் வரும் 29ஆம் தேதி வரையே செல்லுபடியாகும். விசா காலாவதி ஆகும் முன்பு அனைத்து பாகிஸ்தானியர்களும் கட்டாயம் வெளியேற வேண்டும் எனவும் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்தியர்களுக்கு இனி விசா வழங்கப்படாது எனவும் இந்தியாவுடனான எல்லா வர்த்தக ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாகவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.