india

img

இந்தியாவை விட்டு வெளியேறும் பாகிஸ்தானியர்கள்!

அட்டாரி - வாகா எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் தங்களது நாட்டிற்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், அனந்த் நாக் மாவட்டம், பஹல்காமிலிருந்து 7.கி.மீ. தொலைவிலுள்ள பைசரன் என்ற சுற்றுலாத் தலத்தில், செவ்வாயன்று பிற்பகல் 2 மணியளவில், பயங்கர வாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில், 28 பேர் பலியாகியுள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதலுக்கு  பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்  (TRF) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில், சார்க் விசா பெற்று இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, அட்டாரி - வாகா எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் தங்களது நாட்டிற்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.