tamilnadu

img

சிபிஎம் 24ஆவது அகில இந்திய மாநாடு: குறும்படப் போட்டிக்கான பரிசளிப்பு விழா!

சிபிஎம் 24ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி அறிவிக்கப்பட்ட குறும்படப் போட்டிக்கான பரிசளிப்பு விழா சென்னையில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி தலைமையில் நடைபெற்றது.
திரைப்பட இயக்குநர் ராஜு முருகன், திரைப்பட எடிட்டர் சரத் ஆகியோர் தேர்வுக்குழுவாக இருந்து தேர்ந்தெடுத்த குறும்படங்களுக்கு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், ஜி.செல்வா ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர். இதில் தோழர் சீத்தாராம் யெச்சூரி குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.