tamilnadu

img

சென்னையில் யுபிஎஸ்சி பயிற்சி மையம் கட்டப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை,ஏப்.24- யுபிஎஸ்சிக்கு தயாராகும் மாணவர்களுக்கு புதிய பயிற்சி மையங்கள் கட்டப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்
யுபிஎஸ்சி தேர்வுக்காக தயாராகும் மாணவர்களுக்காக சென்னையில் ரூ.40 கோடி மதிப்பில் பயிற்சி மையம் கட்டப்படும்; 500 மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் செனாய் நகரில் பயிற்சி மையம் கட்டப்படும் என சட்டபேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
இந்தாண்டு UPSC தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர்களுக்கு நாளை மறுநாள் பாராட்டு விழா நடக்கவுள்ளதாகவும் அதில் முதல்வர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.