பஹல்காமில் முஸ்லிம் மக்கள் உதவியதாக கூறப்படும் வீடியோக்கள் நீக்கம்
மோடி அரசு அடாவடி
பஹல்காம் பயங்கர வாத தாக்குதல் சம்ப வத்தில் காஷ்மீர் முஸ்லிம் மக்கள் தங்களை காப்பாற்றியதாக உயிர் பிழைத்த சுற்றுலா பயணி கள் வீடியோக்களை வெளி யிட்டனர். குஜராத், சத்தீஸ் கர், மகாராஷ்டிரா, கர்நாட கா, தில்லி, மேற்கு வங்கம் மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் தங்களது சமூக வலைதள கணக்குகள் மூலம் முஸ்லிம் மக்களை வெகுவாக பாராட்டினர். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் டாப் டிரெண்டிங்கில் வைரலா னது. வீடியோ வெளியிட்ட அனைவரும் இந்துக்கள் ஆவர். இத்தகைய சூழலில் இந்து - முஸ்லிம் சகோதரத் துவத்தை பொறுத்துக் கொள்ள முடியாத மோடி அரசு, சமூக வலைத்தளங்க ளில் காஷ்மீர் முஸ்லிம் மக் களை பாராட்டும் வீடியோ வை மெட்டா, டுவிட்டர் எக்ஸ் தளம் மூலம் நீக்கியுள்ளது. ஆனால் காஷ்மீர் முஸ்லிம் மக்களை தவறாக சித்த ரிக்கும் பாஜக குண்டர்களின் வீடியோக்கள் நீக்கம் செய் யப்படவில்லை. இதனை பிரபல சமூகவலைத்தள உண்மை சரிபார்ப்பாள ரான முகமது ஜுபைர் ஆதா ரத்துடன் வெளியிட்டுள்ளார்.