tamilnadu

img

இந்திமயமாகும் ரயில்வே; பாதுகாப்பு நிதி ஒதுக்கீடுகள் இல்லை!

இந்திமயமாகும்  ரயில்வே;  பாதுகாப்பு நிதி ஒதுக்கீடுகள் இல்லை!

ரயில்வே நிலை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி., கவலை

மதுரை, ஏப்.24- மதுரை ரயில்வே கோட்ட நாடா ளுமன்ற உறுப்பினர்கள் ஆலோச னைக் கூட்டத்தில் பல்வேறு கோரி க்கைகள் முன்வைக்கப்பட்டன. இக்  கூட்டத்தின் பின்னர் மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் செய்தியாளர்களைச் சந் தித்துப் பேசினார். தெற்கு ரயில்வே மதுரை கோட்டத் துக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்கான கூட்டம் புதன்கிழமை (ஏப்ரல் 24) நடைபெற்றது. “18வது நாடாளுமன்றம் அமைந்ததிலிருந்து ஓர் ஆண்டு காலம் கடந்துவிட்ட நிலையில், இக்கூட்டம் மிகவும் தாம தமாக நடைபெற்றுள்ளது. நாடாளு மன்றம் அமைந்த நான்கு மாதங்க ளில் இந்தக் கூட்டம் நடைபெற வேண்டியிருந்தது. இந்தத் தாமதம்  ரயில்வே நிர்வாகம் எவ்வளவு அலட்சி யமாக நடந்து கொள்கிறது என்ப தற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்திய ரயில்வே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தைக் கேட்க  வேண்டிய கட்டாயத்தில் உள்ளது”  என்று சு.வெங்கடேசன் தெரிவித்தார். மொழிக்கு மரியாதை தருக! “தற்போது ரயில்வேயில் இந்தி  வார்த்தைகள் மூன்று மொழிகளி லும் (தமிழ், ஆங்கிலம், இந்தி) எழு தப்படுகின்றன. ஆனால், அந்த மூன்று மொழிகளிலும் ஒரே இந்தி வார்த்தையை எழுதி, மாநில மொழி  புறக்கணிக்கப்படுகிறது.  இது 2023 இல் உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலுக்கு எதிரானது. அந்த வழிகாட்டுதலில் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழி யும் சேர்க்கப்பட வேண்டும் என்கிறது.  இது தொடர்பாக எந்த அதிகாரி உத்த ரவு வழங்கினார் என்பதையும், அவர்  மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்  டும் என்பதையும் வலியுறுத்தினோம்” என்றார். பாதுகாப்புக் குறைகள் “பாம்பன் பாலத்திற்குப் பாது காப்புக் கவுன்சில் வழங்கிய மதிப்பீட் டின்படி, அதன் பாதுகாப்புத் திறன் 33 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. வந்தே பாரத் ரயில்களின் இன்ஜின் பகுதி சாதாரண ரயில்களை விட  எடை குறைவாக உள்ளது. இவை  எதிர்க்கட்சியினரால், ரயில்வே பாது காப்புத்துறையால் கூறப்பட்டவை. இது குறித்து முழுமையான தக வலை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டார். அதிகார துஷ்பிரயோகம் “பாம்பன் பாலம் திறக்கப்படும் முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சர், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்  மற்றும் பாஜக தலைவர் அண்ணா மலை ஆகியோர் கலந்து கொண்ட னர். ஒரு ரயில்வே அமைச்சரின் அதி காரப்பூர்வ கூட்டத்தில், ஒரு கட்சித் தலைவர் எவ்வாறு பங்கேற்றார் என்பது ஒரு பெரிய கேள்வி. இது அதிகார துஷ்பிரயோகமாகும்” என வெங்கடேசன் சுட்டிக்காட்டினார். சேவைகள் தொடர்பான முன்னேற்றங்கள் சேவைகள் தொடர்பாக, “போடி நாயக்கனூர் – சென்னை ரயில் தொட ர்ந்து கோரி வந்ததைத் தொடர்ந்து, இது தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்படுகிறது. சார்மி னார் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் - மதுரை மற்றும் நாகர்கோவிலில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்  துள்ளோம். ஹைதராபாத் – தாம்ப ரம் ரயில் - மதுரையிலிருந்து இயக்  கப்பட வேண்டும் என்ற கோரிக்கை யையும் ரயில்வே துறைக்கு அனுப்பி யுள்ளோம்” என்றார். பொதுமக்கள் நலக்கோரிக்கைகள் “மதுரை கூடல்நகர் ரயில்நிலை யத்தை இரண்டாவது முனைய நிலை யமாக மாற்ற வேண்டும். இலவச  வாகன நிறுத்தம் ரயில்நிலையங்க ளில் வழங்கப்பட வேண்டும். தற் போது 10 நிமிடங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது” என்றும் அவர் கோரினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பெண் ரயில் ஓட்டுநர்கள் குறித்து சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது 615 இன்ஜின்களில் கழிப் பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 105 இன்ஜின்களுக்கு ஒப்பு தல் வழங்கப்பட்டுள்ளது” என்றார். புதிய கோரிக்கைகள் “மெமோ ரயில்கள், பகல்நேர ரயில்கள் மற்றும் மேற்கே – தெற்கே  இணைப்பு ரயில்கள் அதிகப்படுத்தப்  பட வேண்டும். 350 கோடி ரூபாய்  செலவில் அமைக்கப்பட்ட புதிய  பாதையில், ஒரு ரயிலே இயக்கப்படு வது மக்களின் தேவையைப் பூர்த்தி  செய்யவில்லை” என்று சு. வெங்க டேசன் குறிப்பிட்டார். பாதுகாப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு “கவாச் பாதுகாப்பு இயந்திரம் அனைத்து ரயில்களிலும் பொருத்த  வேண்டும். தற்போது வந்தே பாரத்  ரயில்களுக்கு மட்டுமே பொருத்தப் பட்டுள்ளது. பாதுகாப்புக்குத் தேவை யான நிதி ஒதுக்கீடு இல்லாமல், தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறு வது கவலையளிக்கிறது. பாதுகாப்பு  முக்கியத்துவம் பெற வேண்டும் என் பதே எங்களுடைய வலியுறுத்தல்” என்று கூறினார். செய்தியாளர் சந்திப்பின்போது மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் ராமமூர்த்தி, ஜெரோம் ஆகியோர் உடன் இருந்தனர்.