ஹாலோ பிளாக் மூலப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை
எம்.சின்னதுரை எம்எல்ஏவிடம் அமைச்சர் ஏ.வ.வேலு உறுதி
சென்னை, ஏப். 24 - ஹாலோ பிளாக் தயாரிப்புக்குத் தேவை யான மூலப்பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை வலியுறுத்தியதன் பேரில் முத லமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் வேலு உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலுவை புதன்கிழமை (ஏப்.23) அவரது இல்லத்தில் சந்தித்த எம். சின்னதுரை எம்எல்ஏ, கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். “புதுக்கோட்டை மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்டோர், ஹாலோ பிளாக் மற்றும் சிமெண்ட் கல், உரைகல், தொட்டிகள் உற் பத்தி செய்யும் தொழிலை செய்து வரு கின்றனர். இத்தொழிலை நம்பி 10 ஆயி ரத்திற்கும் அதிகமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உள்ளது. இத்தொழிலுக்குத் தேவையான மூலப் பொருட்கள் கால் ஜல்லி, அரை ஜல்லி, கிரஷர் மண், பிரைமரி டஸ்ட் ஆகியவற்றின் விலையை, கிரஷர் உரிமை யாளர்கள் அளவுக்கு அதிகமாக உயர்த்தி யுள்ளனர். உதாரணத்திற்கு ரூ. 2 ஆயி ரத்துக்கு விற்ற ஜல்லி தற்போது ரூ. 5 ஆயி ரத்துக்கு விற்கப்படுகிறது. இதனால், இதை நம்பியுள்ள தொழில் முனைவோர் மிகக் கடு மையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எனவே, அமைச்சர் இப்பிரச்சனையில் தலை யிட்டு ஹாலோ பிளாக் தொழிலுக்குத் தேவையான மூலப் பொருட்களின் விலை யை பழைய விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு இருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் ஏ.வ.வேலு, இதுகுறித்து முதலமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரி வித்தார். சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை யுடன் சிஐடியு புதுக்கோட்டை மாவட்டச் செய லாளர் ஏ. ஸ்ரீதர், புதுக்கோட்டை மாவட்ட ஹாலோ பிளாக் தொழிலாளர் சங்கத் தலை வர் ஏ. ஜம்புலிங்கம், பொதுச்செயலாளர் எஸ். முருகானந்தம் உள்ளிட்டோர் உடனி ருந்தனர். கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப் படும் ஹாலோ பிளாக், எம் சாண்ட் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ள தால், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டப் பய னாளிகள் மட்டுமின்றி, அரசு சார்பில் நடை பெற்று வரும் பல்வேறு கட்டுமானப் பணி களை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர் கள் உள்ளிட்ட பலரும் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். கட்டுமானத் தொழில் மற்றும் அதை நம்பியுள்ள உடல் உழைப்புத் தொழி லாளர்களின் நிலையை பெரும் நெருக்க டிக்கு உள்ளாக்கியுள்ளது.