உலக நாடுகளுடன் இந்தியா ஆலோசனை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு தலை தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதர்களுக்கும் அழைப்பு விடுத்து ஒன்றிய அரசு ஆலோசனை மேற் கொண்டுள்ளது. இந்த ஆலோசனை கூட் டத்தில் பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில் இந்தியா மேற்கொண் டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், இந்தியாவின் முடிவுக்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக உள்ள பாகிஸ்தான் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானியர்களுக்கு விசா நிறுத்தம்
பஹல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக பாகிஸ்தானியர்க ளுக்கான விசா நிறுத்தம் தொடர் பாக புதிய உத்தரவை பிறப்பித்துள் ளது ஒன்றிய வெளியுறவு அமைச்சகம். இதுதொடர்பான அறிவிப்பில்,”ஏப்ரல் 27ஆம் தேதி முதல் பாகிஸ்தானியர்க ளுக்கான விசா நிறுத்தப்படுகிறது. மருத்துவ காரணங்களுக்கான விசா வரும் 29ஆம் தேதியுடன் நிறுத்தம் செய்யப்படும்” என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் சுற்றுலா திட்டங்கள் ரத்து : ஐஆர்சிடிசி
காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குத லைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு இயக்கப்படும் சுற்றுலா திட்டங்கள் அனைத்தையும் ரயில்வேயின் உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) ரத்து செய்துள்ளது. சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு பணமும் திரும்ப வழங்கப்படும் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
ஒன்றரை மணிநேரமாக உதவி கிடைக்கவில்லை
கடற்படை லெப்டினண்ட் வினய் நர்வாலின் சகோதரி, ஹரியானா வின் பாஜக முதலமைச்சரி டம்,”என் சகோதரர் 1.30 மணி நேரம் உயி ருக்கு போராடிக் கொ ண்டிருந்தார். உடனே உதவி கிடைத்து இருந்தால் அவரை காப்பாற்றியிருக்க லாம். ஆனால் ஒரு வரும் வரவில்லை” எனக் சொல்லி அழும் காணொலி வீடியோ வைரலாகி வருகிறது.
காஷ்மீரி இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் ; சங் பரிவார் கும்பல் மிரட்டல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு தல் சம்பவத்திற்கு கண்டனம் என்ற பெயரில் தீவிர இந்துத்துவா அமைப்பான இந்து ரக்ஷா தள் என்ற அமைப்பு, உத்தரகண்டிலுள்ள காஷ்மீரி இஸ்லாமிய மாணவர்களை தாக்குவோம் என மிரட்டல் விடுத்திருக்கிறது. வியாழக்கிழமைக்குள் காஷ்மீரி இஸ்லா மியர்கள் உத்தரகண்டில் இருந்து வெளியேற வேண்டும் இல்லையெனில் கொடூரமாகத் தாக்குதல் நடத்துவோம் என கெடு விதித்திருக்கிறது
பாஜக முன்னாள் எம்.பி., பிரக்யாசிங் தாக்கூருக்கு மரண தண்டனை என்ஐஏ கோரிக்கை
கடந்த 2008ஆம் ஆண்டு மகாராஷ் டிராவின் மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 17 ஆண்டுகளாக நடக்கும் இவ்வழக்கில் வரும் மே 8ஆம் தேதி மும்பை சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கின் கடைசி வாதத்தின் போது தேசிய புல னாய்வு முகமை (என்ஐஏ) எழுத்துப் பூர்வமான வாதம் சமர்ப்பித்துள்ளது. அதில்,”மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக முன்னாள் எம்.பி., பிரக்யாசிங் தாக்கூரு க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.