அவிநாசி, பிப்.1- அவிநாசி புனித தோமை யார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டு பேர் மாநில அளவில் நடை பெற்ற வாள் வீச்சுப் போட்டி யில் பதக்கம் பெற்றுள்ள னர். மாநில அளவிலான, வாள்வீச்சுப் போட்டிகள் தமி ழக அரசு சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜன.28 முதல் ஜன.31 வரை ஒசூரில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஐந்து பள்ளிகள் கலந்து கொண்டன. 14, 17, 19 வயது பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. இதில், அவிநாசி பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் தனலட்சுமி, சாதனா ஆகிய இரண்டு மாணவி கள் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் போட்டியிட்டு வெள்ளி பதக்கத்தை வென்றனர். இந்த மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். அதேபோல் மயிலாடுதுறையில் மாநில அளவில் நடை பெற்ற சிலம்பம் போட்டியில், இப்பள்ளியை சேர்ந்த துவா ரகா, கிருத்திகா ஆகிய மாணவிகள் பங்கேற்புக்கான சான்றி தழ் பெற்றுள்ளனர்.