மேட்டுப்பாளையம் – கோவை ரயில் ரத்து
மேட்டுப்பாளையம் – கோவை ரயில் ரத்து கோவை, பிப்.1- வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மேட்டுப்பாளையம் - போத்தனூர், மேட்டுப் பாளையம் - கோவை ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மேட்டுப்பாளையத்திலிருந்து பிப்.2, 4, 6 ஆகிய தேதிகளில் காலை 8.20 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - போத்தனூர் ரயில் (எண்:66611), பிப்.2,4,6 ஆகிய தேதிகளில் காலை 9.40 மணிக்குப் புறப்படும் போத்த னூர் - மேட்டுப்பாளையம் (எண்:66612) ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, மேட்டுப்பாளையத்தில் இருந்து பிப்.4, 6 ஆகிய தேதிகளில் காலை 10.55 மணிக் குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - கோவை ரயில் (எண்: 66613), கோவையில் இருந்து காலை 11.50 மணிக்குப் புறப் படும் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் (எண்: 66614) முழு வதுமாக ரத்து செய்யப்படுகிறது. பிப்.2,4,6 ஆகிய தேதிகளில் ஆலப்புழா - தன்பாத் ரயில் (எண்: 13352) மற்றும் எர்ணாகுளம் – பெங்களூரு ரயில் (எண்: 12678) போத்தனூர் - இருகூர் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளதால் இந்த ரயில்கள், கோவை நிலையம் செல்வது தவிர்க்கப்படும். போத்தனூரில் இந்த ரயில்கள் நின்று செல்லும், எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
தீக்கதிர் செய்தி எதிரொலி: ரூ.1 லட்சம் வரி விதித்தவர் இடைநீக்கம்
கோவை, பிப்.1- தீக்கதிர் செய்தி எதிரொலியாக, ஓட்டு வீட்டுக்கு ரூ.1 லட்சம் வரி விதித்த வரி வசூ லர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டும், இரண்டு பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கோவை, காந்திபுரம் கிராஸ்கட் சாலை, 8 ஆவது வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (76). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் தனது தாத்தாவின் ஓட்டு வீட்டில் வசித்து வருகி றார். வீட்டின் முன்புற பகுதியை ‘உண வகம்’ நடத்த வாடகைக்கு விட்டு உள்ளார். இந்நிலையில் வரி சீராய்வு செய்த மாநக ராட்சி சார்பில் டிரோன் சர்வே முறை அம லாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் டிரோன் அளவீடு அடிப்படையில் வரி சீராய்வு செய் யப்படுகிறது. இதில் பழனிச்சாமி வீட்டுக்கு இதுவரை ரூ.2,182 செலுத்தி வந்த நிலையில் டிரோன் சர்வே மூலமாக கூடுதல் சதுர அடி காட்டி இனி 6 மாதத்துக்கு ஒருமுறை ரூ.51 ஆயிரத்து 322 சொத்து வரி, குப்பை வரி ரூ.300, அபராத கட்டணம் ரூ.1,050 சேர்த்து ஒரு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 464 செலுத்த வேண்டும் என மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது குறித்து பழனிச்சாமி மாநகராட்சி மத்திய மணடலத்தில் புகாரளித்தார். ஆனால் அதனை புகார் பெட்டியில் போடுமாறு பணியாளர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து அவரது பிரச்ச னைக்கு தீர்வு காணமால் சொத்து வரியை கட்ட அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர். இத னால் பழனிச்சாமி கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகவும், அவருக்கு அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என முதன்முதலில் தீக்கதிரில் விரிவான செய்தி வெளியானது. இந்நிலையில், தகவலறிந்த மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இந்த தவ றுக்கு காரணமான வரி வசூலரை பணியிடை நீக்கம் செய்யவும், மண்டல உதவி வருவாய் அலுவலருக்கு விளக்கம் கேட்டு அறிவிப்பு கொடுக்கவும் உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி துணை ஆணையர் குமரேசன் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப் பிக்கவும் அறிவுறுத்தினார். அதன்படி துணை ஆணையாளர் விசாரணை நடத்தினார். டிரோன் மூலம் ஆய்வு செய்து வரி சீராய்வு செய்தபோது பணியாற்றிய வரி வசூலர் ஜெய் கிருஷ்ணன் பணியிடைநீக்கம் செய்யப்பட் டார். தற்போதைய வரி வசூலர் ஆனந்த் பாபு, உதவி வருவாய் அலுவலர் கிருபாகரன் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் விநியோகம் கொடுக்கப்பட்டுள்ளதாக மாந கராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ட்ரோன் சர்வேயில் குளறுபடி ஏற்படும் என முன்னரே மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சே பனை தெரிவித்திருந்தது. இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் மற்றும் சிபிஎம் மாமன்றக்குழு தலைவர் வி.இராமமூர்த்தி உள்ளிட்டோர் மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரனை சந்தித்து முறையிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செயலா ளர் சி.பத்மநாபன் கூறுகையில், மாநகராட்சி நிர்வாகம் ட்ரோன் சர்வே மூலம் வரிவிதிப்பை மேற்கொள்வதால் சாதாரண மக்கள் கடுமை யாக பாதிக்கப்படுகின்றனர். இப்படி பாதிக் கப்படுகிற மக்கள் ஏதேனும் புகார் கொடுத் தால், அதுகுறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. வாரக்கணக்கானா லும் புகார் குறித்த நிலையின் விளக்கத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்ப தில்லை. வருமானத்தை அதிகரிக்க வேண் டும் என்கிற ஒற்றை நோக்கம் மட்டுமே மாநக ராட்சிக்கு இருக்கிறதேயொழிய மக்களின் வாழ்நிலை குறித்த எந்த அக்கறையும் இவர் களுக்கு இருப்பதில்லை. உதாரணத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு அலுவலகத்திற்கு இதுநாள் வரையில் ரூ.4500 வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது 48ஆயிரத்து 500 ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்போதுதான் நூறு சதவிகிதம் வரி உயர்த்தப்பட்டது. இதற்கு பின்னால், மீண்டும் வரி புத்தகத்தில் கை வைப்போம், வரியை உயர்த்துவோம் என்று, செயற்கையாக இப்படி வரியை உயர்த்து வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடி யாது, என்றார்.
புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு
புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு கோவை, பிப்.1- கருமத்தம்பட்டியில் புதிய தீயணைப்பு நிலையத்தை, அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் புதிய தீய ணைப்பு நிலைய அலுவலகம் சனியன்று திறக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு புதிய தீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்தார். இதில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் புலுகாண்டி, நகராட்சி தலைவர் நித்யா ஜி.மனோகரன், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கருமத்தம்பட்டி சுரேஷ்குமார், சூலூர் இராமசுப்பிரமணியம், நகராட்சி ஆணையாளர் பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், “இந்த புதிய தீயணைப்பு நிலையம் கருமத்தம்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந் தது. தற்போது இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையம் மக்களுக்கு எப்போதும் உதவியாக இருக்கும்” என்றார். ஆட்சியர் பேசுகையில், இந்த தீய ணைப்பு நிலையம் கருமத்தம்பட்டி பகுதிக்கு ஒரு வரப்பிர சாதம், என்றார்.
உதகை பனிப்பொழிவின் தாக்கம் எதிரொலி
கால்நடை தீவனம் பற்றாக்குறை: விவசாயிகள் கலக்கம்
உதகையில் பனிப்பொழிவின் காரணமாக கால்நடைகளுக்கான மேய்சல் நிலங்களில் உள்ள புற் கள் பெரும்பாலான இடங்களில் காய்ந்துள்ளதால் உணவு கிடைக் காமல் 22 ஆயிரம் மாடுகளுக்கு பசும் புற்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கால்நடை வளர்க் கும் விவசாயிகள் கூறுகையில், ஆடு, மாடு, குதிரை போன்றவற் றிற்கு புற்கள் கிடைக்காமல் ஆண்டுதோறும் கோடை காலத் திலும், பனிகாலத்திலும் இன்னல் களை சந்தித்துதான் வருகிறோம். சந்தையில் வாங்கும் பருத்தி கொட்டை, புண்ணாக்கின் விலை யும் அதிகரித்து காணப்படுகிறது. கால்நடைகளை பெரும்பாலும் மேய்சல் நிலங்களில் காலை நேரங் களில் அவிழ்த்து விட்டால் மாலை யில் கொட்டகைகளை வந்தடை யும். ஆனால், தற்போது நீலகிரியில் காணப்படும் பனிப்பொழிவின் கார ணமாக இயற்கை உணவு கிடைக் காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றோம், என்றனர். இதுகுறித்து ஆவின் பொது மேலாளர் ஜெயராமன் கூறுகை யில், நீலகிரி மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்துடன் தொடர்பில் 6 முதல் 7 ஆயிரம் மாடுகள் வரை உள்ளன. முன்பு நாளொன்றுக்கு 11 ஆயிரம் லிட்டர் பால் கிடைத்து வந்தது. இந் நிலையில் தற்போது 9 ஆயிரம் லிட் டர் வரை மட்டுமே பால் கிடைக்கி றது. ஆவின் நிறுவனம் மூலம் மக் காச்சோளம், தவிடு, கருவாடு, புண் ணாக்கு, அரிசி உள்ளிட்ட கலவை கள் மூலம், செரிவூட்டப் பட்ட 50 கிலோ தீவன மூட்டை ஈரோட்டில் இருந்து தருவிக்கப்பட்டு விவசாயி களுக்கு மாதம் 30 ஆயிரம் கிலோ வரை மூட்டை ஒன்றுக் ரூ.1300 விலைக்கு வழங்கி வருகிறோம். இதனை மானியத்தில் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் கால்நடை பராமரிப்பு துறை, ஆவின் நிறுவனம் மற்றும் விவசா யப் பிரநிதிகளைக் கொண்டு கமிட்டி அமைத்து கோடை மற்றும் பனிக்காலத்தில் வைக்கோல் உள்ளிட்ட தீவனங்களை சமவெ ளியில் இருந்து மொத்தமாக கொள் முதல் செய்து விவசாயிகளுக்கு பிரித்து வழங்க விரைவில் முடிவெ டுக்கப்படவுள்ளதாக தெரிவித் தார். நீலகிரியில் 60 சதவீதம் வனப் பகுதிகள் என்பதால் இப்பகுதிக ளில் கால்நடைகளை மேய்ப்பதற்கு வனத்துறையினர் அனுமதிப்ப தில்லை, இருக்கும் ஒரு சில புல் வெளிகளும் பனி மற்றும் கோடைக் காலத்தில் காய்ந்து விடுவதால் கால்நடை வளர்ப்போரின் எதிர்கா லமே கேள்விக் குறியாகியுள்ளது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சமவெளிப்பகுதிகளில் இருந்து மொத்தமாக வைக்கோல் களை கால் நடை மற்றும் ஆவின் நிர்வாகம் கொள் முதல் செய்து, விவசாயிகளுக்கு பிரித்து வழங்குவ தன் மூலம் கோடை மற்றும் பனிக் காலத்தில் கால்நடைகளுக்கான தீவனத் தேவையை எதிர் கொள்ள முடியும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. -அமீன், உதகை
மக்காச்சோள விலை வீழ்ச்சியை தடுக்க வலியுறுத்தல்
திருப்பூர், பிப்.1 - மக்காச்சோள விலை வீழ்ச்சியை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.ஆர்.மதுசூதனன் வெள்ளியன்று திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட் டத்தில் வலியுறுத்தினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் கூறுயதா வது, திருப்பூர் மாவட்டத்தில் மக்காச்சோ ளம் ஒரு லட்சம் ஏக்கர் வரை பயிர் செய்யப் பட்டுள்ளது. மூன்று மாதத்திற்கு முன்பு மக் காச்சோளம் பயிர் செய்யும் போது ஜனவரி மாதம் வரை 100 கிலோ மூட்டை ஒன்று ரூ. 2700 முதல் 2900 வரை விற்பனை ஆகி வந்தது விவசாயிகள் 2024 செப்டம்பர் அக்டோபர் மாதம் விலையை கருத்தில் கொண்டு மக்காச் சோளம் பயிர் செய்தனர், ஆனால் 2025 ஜன வரி 10 ஆம் தேதிக்கு மேல் மெல்ல மெல்ல விலையை குறைத்து கொண்டே வந்து அறு வடை நடைபெறும் இக்காலத்தில் மக்காச் சோளம் 100 கிலோ ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2250 முதல் 2350 தான் வாங்குகின்றனர். இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு ஒரு ஏக் கருக்கு ரூ. 6000 முதல் ரூ. 7000 வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்காச்சோளம் கோழி தீவனம், கால்ந டைகளுக்கு கலப்பு தீவனம் உற்பத்தி செய் யும் நிறுவனங்கள் தான் வாங்குகின்றனர், ஆனால் இக்காலத்தில் கோழி, கால்நடை களுக்கு கலப்பு தீவனங்களின் விலை குறைய வில்லை. மாதா, மாதம் விலை உயர்த்தி கொண்டே வருகிறது. இந்த நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து விலை குறைப்பு செய்வதா கவே தெரிய வருகிறது எனவே மக்காச்சோளம் பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும், ஒரு குவிண்டாலுக்கு ரூ. 5000/- விலை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாயிகள் நஷ்டம டைவதை தடுக்க வேண்டும் என மதுசூத னன் கேட்டுக்கொண்டார்.
ஜெயரஞ்சன் நூல் அறிமுக விழா
திருப்பூர், பிப்.1 - தமிழ்நாடு திட்டக்குழு செயல் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் எழுதிய நூல் அறிமுக விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் திருப்பூரில் நடத்தப்பட்டது. பேராசிரியர் ஜெயரஞ்சன் எழுதிய “புலம் பெயர் தொழிலாளர்கள் வேலையும், சூழ லும்” என்ற புத்தகத்தின் அறிமுக விழா வெள் ளியன்று திருப்பூர் காங்கயம் சாலை பொதிகை அரங்கில் நடைபெற்றது. தமுஎகச தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் தலைமையேற்க, திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் வரவேற் றார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் இணைச்செயலாளர் குமார் துரைசாமி துவக்கி வைத்து உரையாற்றினார். நிகழ்வில் இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தேசியத் தலைவர் கே.இ.ரகுநாதன், இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் வழக்கறிஞர் கே.சுப்பிரமணியன் ஆகியோர் புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து விளக்கி உரையாற்றினர். திருப்பூர் மாவட்ட தமுஎகச-வைச் சேர்ந்த எழுத்தாளர்கள் நிகழ்வில் ஜெயரஞ்சனால் சிறப்பிக்கப்பட்டனர். புலம் பெயர் தொழிலா ளர் குறித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளின் கேள்விகளுக்கு விளக்கமளித்து ஜெய ரஞ்சன் ஏற்புரை வழங்கினார். நிகழ்வின் இறுதியில் மு.திருப்பதி நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வினை தமுஎகச திருப்பூர் மாவட்டத் தலைவர் பி.ஆர்.கணே சன் ஒருங்கிணைத்தார்.
எதிர்பார்த்த திட்டங்கள் இல்லை: நிதியமைச்சரை சந்திக்க ஏற்றுமதியாளர்கள் முடிவு
திருப்பூர், பிப்.1- தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டம் மற்றும் வட்டி சமன்படுத்தும் திட்டம் குறித்து பட்ஜெட்டில் அறி விப்பு வரும் என எதிர்பார்த்திருந் தோம். அது வரவில்லை. எனவே இது குறித்து நிதி அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலு வலகத்தில் சனியன்று திருப்பூர் ஏற்று மதியாளர் சங்கத் தலைவர் கே.எம். சுப்பிரமணியன் பத்திரிகையாளர்க ளிடம் கூறியதாவது: பிணையில்லா கடன் ரூ.10 கோடி, ஸ்டார்ட் அப் நிறுவனங்க ளுக்கு ரூ.20 கோடி கடன் வழங்க அறிவிப்பு, பெண் தொழில் முனை வோருக்கு கடன் ரூ.2 கோடியாக அதி கப்படுத்தி அறிவிப்பு, எம்.எஸ்.எம்.இ வரையறையில் குறைந்தபட்சம் விற் றுவரவு (டர்ன்ஓவர்) ரூ.250 கோடியில் இருந்து ரூ.500 கோடியாக உயர்த்தி உள்ளது போன்ற அம்சங்கள் உள் ளன. பருத்தி உற்பத்திக்கு ஐந்தாண்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிக மகசூல் தரக்கூடிய பருத்தி விலை குறைவாக கிடைக்கும். இந் திய அளவில் ஐந்து திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அறிவித்துள்ளதில் ஒன்று திருப்பூருக்கு கிடைக்க வாய்ப் புள்ளது. அது வந்தால் மிக சாதக மாக இருக்கும். எதிர்பார்த்தது இல்லை எக்ஸ்போர்ட் புரமோஷன் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதை வர வேற்கிறோம். ஜவுளித் தொழில் வளர்ச்சிக்காக புதிய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தவும் தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம் ஏ-டப் திட்டம் மற்றும் ஏற்றுமதியா ளர்களுக்கு குறைந்த வட்டி விகி தத்தில் ஏற்றுமதிக்கு முந்தைய மற் றும் பிந்தைய ரூபாய் ஏற்றுமதி கடன் களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட வட்டி சமன்படுத்தும் திட்டம் மற்றும் சென்ற நிதியாண்டில் வேலை வாய்ப்புடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் குறித்து அறி வித்திருந்தனர். அது குறித்து அறிக்கை வரும் என எதிர்பார்த்தி ருந்தோம் அது வரவில்லை. இது தொடர்பாக நிதி அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம் என் றார். டீமா தலைவர் முத்துரத்தினம் திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முத் தரத்தினம் பட்ஜெட் குறித்து கூறுகை யில், பருத்தி இறக்குமதி வரி குறைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பங்களாதேஷில் இருந்து இறக்கும தியாகும் ஆடைகளுக்கு வரி விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந் தோம். அது குறித்து அறிவிப்பு வெளி யிடப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்றார். வங்கதேசம் இந்தியாவில் இருந்து குறைந்த விலைக்கு மூலப் பொருள்கள் வாங்கி, அவற்றை துணி யாக உற்பத்தி செய்து மீண்டும் இந்தி யவிற்கு ஏற்றுமதி செய்வதால், இந் திய உள்நாட்டு பின்னலாடை உற் பத்தி மற்றும் விற்பனை கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஜவுளித் தொழில் துறையினருக்கு மிகுந்த சிக்கல்களை உருவாக்கி வருகிறது. எனவே வங்கதேசத்தில் இருந்து இறக்குமதியாகும் ஆயத்த ஆடை மற்றும் துணிகளுக்கு வரி விதிக்க வேண்டும் என ஜவுளித் தொழில் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி இருந்தனர். இந்த கோரிக்கை குறித்து பட்ஜெடில் அறி விக்கப்படாதது தொழில் துறையி னருக்கு ஏமாற்றமே!
வஞ்சிபாளையம் உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்தாமல் தாமதிப்பது ஏன்?
அவிநாசி அருகே வஞ்சிபாளை யம் அரசு மேல்நிலைப் பள்ளியை தரம் உயர்த்துவது எப்பொழுது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வரு கின்றனர். அவிநாசி ஒன்றியம், புதுப்பா ளையம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சி பாளையத்தில் அரசு உயர்நிலை பள்ளி இருக்கிறது. மங்கலம் சாலை யில் அமைந்துள்ள இப்பள்ளி வளா கத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பப் பள்ளி தனியாகவும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உயர்நிலைப் பள்ளி தனியாகவும் இருக்கிறது. 1954ஆம் ஆண்டு முதல் ஆரம்பப் பள்ளி செயல்படுகிறது. தொடர்ந்து 1969இல் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை நடுநிலைப் பள்ளியும், 2010 முதல் 10ஆம் வகுப்பு வரை தரம் உயர்த்தி உயர்நிலைப் பள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது. இங்கு 2013 முதல் ஆங்கில வழிக் கல்வியும் இருக்கிறது. இப்பள்ளியில் பத்தாம் வகுப் பில் மட்டும் 70 மாணவ, மாணவி கள் படித்து வருகின்றனர். இப்பள் ளியைத் தரம் உயர்த்த தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்ப குதி மக்கள் கோரி வருகின்றனர். இங்கு 10ஆம் வகுப்பு வரை படித்த வர்கள் 11, 12ஆம் வகுப்புகளுக்கு அவிநாசி அல்லது அருகாமை ஊர் களுக்குச் செல்ல வேண்டியிருக் கிறது. இதனால் இப்பகுதி பெண் குழந்தைகள் கல்வி பயில்வது பாதிக்கிறது. அதேபோல ஆண் குழந்தைகள் குறித்த நேரத்திற்கு பேருந்து வசதிகள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இதனால் அவர் களின் கல்வியும் பாதிக்கிறது. இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த, அப்பகு தியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பி. முத்துச்சாமி தலைமையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மாநிலங்க ளவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் மூலம் அதிமுக ஆட்சிக் காலத்தில், அப்போதைய கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதே போல இவர்கள், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பி னர் சின்னத்துரை மூலம், துறை அமைச்சருக்கும், அதிகாரிக ளுக்கும் மனு அளித்தனர். எனினும் தரம் உயர்த்துவது இன்னும் கேள் விக்குறியாகவே இருக்கிறது. இதுகுறித்து கல்விக் குழு தலைவர் பி.முத்துசாமி கூறுகை யில், பள்ளியைத் தரம் உயர்த்த இரண்டு லட்சம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும், இந்தப் பண மும் கட்ட தயாராக இருக்கிறோம். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் தரம் உயர்த்த மனு அளித்து விரிவாகப் பேசியிருந்தோம், ஆனால் மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்த வில்லை. இப்பகுதியில் தொழிற்சா லைகள் ஏராளமாக வந்துவிட் டன. திருப்பூர் எல்லைக்கும் வஞ்சி பாளையம் பகுதிக்கும் மூன்று கிலோமீட்டர் மட்டுமே இருக்கி றது. ஆனால் இப்பள்ளியைத் தரம் உயர்த்த ஏன் தயக்கம் காட்டுகி றார்கள் என்று தெரியவில்லை. அரசு இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார். அப்பகுதியைச் சேர்ந்த அருள் கூறுகையில், நான்கு கிலோமீட்ட ருக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி இருக்க வேண்டும் ஆனால், எங்கள் பகுதி குழந்தைகள் 8 கிலோமீட்டர் சென்று கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது. போதுமான பேருந்து வசதி இல்லை. பல ஆண்டுகள் போராடியும் தரம் உயர்த்தாமல் இருந்து வருகின்ற னர். தற்போது வரை காலை நேரங் களில் 150-க்கும் மேற்பட்ட குழந்தை கள் அவிநாசி, அனுப்பர்பாளை யம், திருப்பூர் நஞ்சப்பா பள்ளி, ஜெவாபாய் பள்ளி உள்ளிட்ட பள்ளி களுக்கு பேருந்தில் நின்று கொண்டே செல்லும் அவல நிலை இருக்கிறது, பின்தங்கிய மக்கள் வீட்டுப் பிள்ளைகள் படிப்பு அறிவு பெற, ஏழை குழந்தைகள் கல்வி மேம்படுத்த உடனடியாக பள்ளி யைத் தரம் உயர்த்த வேண்டும் என்றார். பெற்றோர் தேவராஜ் கூறுகை யில், இரண்டு குழந்தைகள் கல்வி பயின்று வருகிறார்கள், ஒரு குழந்தை 9ஆம் வகுப்பு, மற்றொரு குழந்தை ஏழாம் வகுப்பு படித்து வருகின்றனர். இங்கு 10ஆம் வகுப்பு முடித்தவுடன் மேல்நிலை கல்வி பயில்வதற்கு மங்கலம், 65 வேலம்பாளையம் அல்லது அவிநா சிக்கு செல்ல வேண்டிய நிலை உள் ளது. குறித்த நேரத்திற்கு பேருந்து வசதி இல்லை. இதனால் பெரும் பகுதியினர் எங்கள் பகுதியில் பத்தாம் வகுப்புடன் நின்று விடுகின் றனர். பலரும் விவசாயம், விசைத் தறி மற்றும் பல்வேறு வேலைக்கு செல்கின்றனர். எனவே உடனடி யாக மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கூறினார். தங்கவேல் கூறுகையில், கணி யாம்பூண்டி, புதுப்பாளையத்தில் மொத்தம் 17 ஆயிரம் மக்கள் தொகை இருக்கிறது. இங்குள்ள பிள்ளைகள் 10 ஆம் வகுப்பு முடித் தபின், மேல்நிலைப் படிப்பிற்கு மங் கலம், அவிநாசி, திருப்பூருக்கு செல்ல வேண்டியுள்ளது. தொலை தூரம் செல்ல வேண்டிய காரணத் தால் பலர் படிப்பை நிறுத்தி விடு கிறார்கள். பொருளாதார அடிப்ப டையிலும் பாதிக்கப்படுவதால் படிப்பை தொடர்ந்து கொண்டிருக் கும் குழந்தைகளும் இடையில் நின்று விடுகின்றனர். தற்பொழுது கூட வஞ்சிபாளையம் பள்ளியில் 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்கள் நலன் கருதி தமிழக அரசு உடனடியாக மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்றார் விரிவடைந்து வரும் வஞ்சிபா ளையம் பகுதி மக்கள் குரலுக்கு செவி சாய்க்க அரசு நிர்வாகமும், கல்வித் துறையும் அலட்சியம் காட் டுவது ஏன்? என்பதே மக்களின் ஏகோ பித்த கேள்வியாக உள்ளது. (ந.நி)
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு விருது
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு விருது சேலம், பிப்.1- தெற்கு ரயில்வே மண்டலத்தில் சிறந்த செயல்திற னுக்காக சேலம் ரயில்வே கோட்டத்துக்கு 13 விருதுகள் கிடைத்துள்ளன. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தில் நடைபெற்ற வார விழாவில், சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திரு வனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் சிறந்த செயல்திற னுக்காக துறைவாரியாக விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்த விருது வழங்கும் விழா சென்னை தெற்கு ரயில்வே அலுவல கத்தில் நடைபெற்றது. இதில், மண்டல பொதுமேலாளர் ஆர்.என்.சிங் கலந்துகொண்டு சிறப்பாக செயலாற்றிய அதிகாரி களுக்கும், துறைவாரியாக சிறந்த செயல்திறனுக்காகவும் விருதுடன் கூடிய கேடயங்களை வழங்கினார். இதில், சேலம் ரயில்வே கோட்டம் துறைவாரியாக சிறந்த செயல்திறனுக் காக விருதுகளை வென்றது. சிறப்பான செயல்பாட்டுக்கான தனிநபர் விருதுகளை 13 அதிகாரிகள் பெற்றனர். இது குறித்து கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா கூறுகை யில், ஒவ்வொருவரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணியால் தான் இத்தகைய சாதனையை படைக்க முடிந்தது, என் றார்.
ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை சேலம், பிப்.1- கொங்கணாபுரம் வாரச்சந்தையில் 4 ஆயிரம் ஆடுகள், ரூ.6 கோடிக்கு விற்பனையானது. சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் சனிக்கிழமை வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இச்சந் தைக்கு சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட பகுதி களிலிருந்து ஏராளமான விவசாயிகளும், வியாபாரிகளும் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்தும், வாங்கி யும் செல்கின்றனர். இந்நிலையில், சனியன்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு 7 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. தை மற்றும் மாசி மாதங்கள் திருவிழா காலமானதால், ஆடுகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி, சனியன்று மட்டும் 4 ஆயிரம் ஆடுகள், ரூ.6 கோடிக்கு விற்பனையானது.
தெய்வத்தமிழ் வழிபாட்டாளர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்
கோவை, பிப்.1- கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குடமுழுக்கை, தமிழ் வழியில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி பேரூர் கோவில் முன்பு உண்ணாவிரத போராட் டம் நடைபெற்றது. கோவை சிறுவாணி சாலை, பேரூரில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வரும் 10-ஆம் தேதி குட முழுக்கு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குட முழுக்கு விழாவை தமிழ் வழியில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி தெய்வத் தமிழ் வழிபாட்டாளர்கள் கூட்டமைப்பி னர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடு பட்டனர். அப்போது, விமான கோபுரம் கலசம், யாக குண்டம், கருவறை ஆகிய இடங்களில் திருக்குறள் குடமுழுக்கு நடத்த ஏதுவாக, சமஸ்கிருதம் வழி பாட்டாளர்களுக்கு இணையாக, தமிழ் வழிபாட்டாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற உத் தரவை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். தகவலின் பெயரில் பேரூர் வட்டாட்சியர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். தொடர்ந்து பிப்ரவரி 3ஆம் தேதிக்கு மேல் இந்து சமய அறநிலை யத்துறை உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். இதையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட் டனர்.
வாழைத்தார் விலை உயர்வு
வாழைத்தார் விலை உயர்வு நாமக்கல், பிப்.1- வாழைத்தார் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதி யில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள் ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளம், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலை யில், புதனன்று தை அமாவாசை என்பதால் பரமத்திவேலூர் வாழைத்தார் மார்க்கெட்டிற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. கடந்த வாரத்தைவிட பூவன் வாழைத்தார் ஒன்றிற்கு ரூ.500 முதல் ரூ.700 வரை விலை உயர்ந்து விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.