சேலம், பிப்.1- மகுடஞ்சாவடி அருகே குடியிருப்பு பகுதி அருகே தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியம், மகுடஞ்சாவடி ஊராட்சி, குப்பாண்டிபாளையம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், தனியார் மருத்துவமனை, சார் பதிவா ளர் அலுவலகம் உள்ளிட்டவை செயல் பட்டு வருகின்றன. மகுடஞ்சாவடி - கொங்கணாபுரம் செல்லும் சாலையான குப்பாண்டிபாளையம் பகுதியில், கடந்த ஒரு மாத காலமாக சாக்கடை கழிவுநீரானது தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மகுடஞ்சாவடி வட் டார வளர்ச்சி ஆணையரிடம் மனு அளித் தும், எந்தவித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இதனால் ஆவேசம டைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற் பட்டோர், குப்பாண்டிபாளையம் பகுதி யில் வெள்ளியன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மகுடஞ்சாவடி காவல் துறையினர், மகு டஞ்சாவடி வட்டார வளர்ச்சி ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இதன்பின் பொறியாளரை வரவழைத்து தேங்கி நிற்கும் சாக்கடை நீரை நீரோடையில் இணைக்க முடிவு செய்து அதற்கான பணி மேற்கொண்டனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.