districts

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு

நாமக்கல், பிப்.1- குமாரபாளையத்தில் சனியன்று நடைபெற்ற ஜல்லிக் கட்டு போட்டியில், 600 காளைகளும், 400 வீரர்களும் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள வளையகாரனூர் பகுதியில், குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், 9 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி சனியன்று நடைபெற்றது. திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி உறுதிமொழி வாசிக்க, வீரர்கள் அனை வரும் ஏற்றுக்கொண்டனர். தமிழக ஆதித்திராவிடர் நலத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கொடியசைத்து போட் டியை துவக்கி வைத்தார். இப்போட்டியில் 600 காளை களும், 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலை மையில், ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர். போட்டி துவங்கி 20 நிமிடங்களில் 4 வீரர்கள் மாடு முட்டி காயம் ஏற்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாட்டின் உரிமை யாளர்கள், வீரர்கள் என 35க்கும் மேற்பட்டோர் காயமடைந் துள்ளனர். சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்க ளுக்கு பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் போட்டியை கண்டு ரசித்த னர்.