தருமபுரி, பிப்.1- அரூரில் சத்துணவு சாப் பிட்ட 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 900க்கும் மேற்பட்ட மாணவிகள், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்ற னர். இப்பள்ளியில் பயிலும் சுமார் 340 மாணவி களுக்கு மதிய உணவு தயார் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, வெள்ளியன்று சத்து ணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட பள்ளி சமையலர்கள், சமைத்திருந்த உணவினை பிற்பகல் 12 .30 மணியளவில் பரிமாறினார் கள். சத்துணவை வாங்கி சாப்பிட்ட 8 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைய டுத்து அவர்கள் அனைவரும் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் 6 மாணவிகள் பரிசோத னைக்கு பிறகு சீரடைந்தனர். கனிஷ்கா, சந்தியா ஆகியோர் மட்டும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அரூர் சட்ட மன்ற உறுப்பினர் சம்பத்குமார், மருத்துவ மனைக்கு சென்று மாணவிகளை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இது தொடர்பாக அரூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அரூர் வருவாய் கோட்டாட் சியர் வே.சின்னுசாமி நேரில் சென்று விசா ரணை மேற்கொண்டார். வருவாய் ஆய்வா ளர் சத்தியபிரியா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.