tamilnadu

தமிழக வீரர்கள் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்

சென்னை,பிப்.1- 38 ஆவது  தேசிய அளவிலான களரிப் போட்டி ஜனவரி 29,30 ஆகிய தேதிகளில் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்றது. இதில், களரிப்பயட்டு விளை யாட்டு மட்டும் டேமோ (அறிமுக விளையாட்டு) என்ற அடிப்படையில் நடத்தப்பட்டது, இதில் தமிழ்நாடு அணி சார்பில் கோவை, திருப்பூர், உடுமலை, பழனி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்க ளைச் சேர்ந்த  10 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் உருமி வீசல் பிரிவில் திருப்பூர் மாவட்டத்தின் சுருதி, கைப்போர் 50-65 கிலோ எடைப் பிரிவில் கோவை மாவட்டத்தின் தேவசோழன்,வாள் கேடயம் பிரி வில் கன்னியாகுமரி மாவட்டத்தின் சங்கர் வேலப்பன் மற்றும் ஐயப்பன் ஆகியோர் வெண்கலப் பதக் கங்களை வென்றனர்.

பதக்கம் வென்ற வீரர்களுக்கு தமிழ்நாடு களரிப்பயட்டு சங்கத்தின் தலைவர் தேவராஜன், செயலாளர் வீரமணி மற்றும் பொறுப்பாளர்கள், தமிழக ஒலிம்பிக் கமிட்டி மற்றும் இந்தியன் களரிப்பயட்டு  பெடரே ஷன் ஆகியோர் வாழ்த்து தெரி வித்துள்ளனர். கோவாவில் நடந்த 37 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் களரிப்பயட்டு விளையாட்டுப் போட்டியாக சேர்க்கப்பட்டது.  38வது தேசிய போட்டியில் விளை யாட்டுப்போட்டி என்பதை மாற்றி அறிமுகம் என்று பதக்கப் பட்டிய லில் தமிழ்நாட்டை வஞ்சித்து விட்டது.