districts

img

பாக்கியம் இல்லத் திருமண விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி - எஸ்.செல்வராஜ் ஆகியோரின் மகன் எஸ்.சேகுவேரா, கே.மாரியப்பன் - எம்.சரஸ்வதி ஆகியோரின் மகள் எம்.இசைசெல்வி இணையேற்பு விழா மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமையில் வெள்ளியன்று (ஜன. 31) திருவொற்றியூர் எர்ணாவூரில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், எல்.பி.சரவணத்தமிழன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.ராதிகா, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.செல்வகுமாரி, திருவொற்றியூர் வடக்கு பகுதி செயலாளர் எஸ்.கதிர்வேல், தெற்கு பகுதி செயலாளர் ஆர்.கருணாநிதி, நிர்வாகிகள் பி.அலமேலு, கே.கே.புஷ்பா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.