tamilnadu

தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய அரசின் பட்ஜெட்

சென்னை, பிப்.1- ஒன்றிய அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமையன்று (பிப்.1) தாக்கல் செய்தார். இது குறித்து தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்தி ருக்கும் கருத்துகள் வருமாறு:

ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்

ஒன்றிய பாஜக அரசு தாக் கல் செய்திருக்கும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் தேவைகள் எது வும் பூர்த்தி செய்யப்பட வில்லை. இது பெரும் ஏமாற் றத்தை அளித்திருக்கிறது என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

வார்த்தை ஜாலங்கள் அறிக்கை 

அதிமுக பொதுச் செயலா ளர் எடப்பாடி பழனிசாமி கூறு கையில்,  பீகார் மாநிலத்தில் விரைவில் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அம் மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்களை அறி வித்துள்ளதால், ஒன்றிய அர சின் நிதிநிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு - செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்த விதமான சிறப்பு திட்டங்களும் இல்லை. மொத்தத்தில் பட்ஜெட் மாயாஜால அறிக்கை யாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது என்றார்.

பீகார் பட்ஜெட் 

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி தெரிவிக்கையில், என்னுடைய நாடாளுமன்ற அனுபவத்தில் முதல்முறை யாக பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறினார்.

கானல் நீராக...

கடந்த 10 ஆண்டுகளில் சராசரி வளர்ச்சி விழுக்காடு 6 தான் இருக்கிறது. ஒன்றிய பாஜக அரசு, ஏழை-எளிய அடித்தட்டு மக்களுக்கான அர சல்ல. உயர் வருமானம் பெறு கிறவர்களுக்கு ஆதரவாகத் தான் வரிச் சலுகைகளை வழங்குகிறது. கூட்டாட்சி தத்து வத்திற்கு எதிரான பட்ஜெட் மட்டுமல்ல ஒரு கானல் நீரா கவே அமைந்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த ஏமாற்றம்

மதிமுக பொதுச்செயலா ளர் வைகோ கூறுகையில்,  சட்ட மன்ற தேர்தலை எதிர்நோக்கி உள்ள பீகார் மாநிலத்துக்கு சிறப்புத் திட்டங்களை அறி வித்து, நிதி ஒதுக்கீடு செய் துள்ள ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சித்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். தமிழக அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதி, மெட்ரோ ரயில் பணிகளுக்கான நிதி குறித்த அறிவிப்புகள் இல்லை. ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்தமாக ஏமாற்றத்தையே தருகிறது.

உழைக்கும் மக்களை வஞ்சித்துள்ளது 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் இரா.முத்தரசன்  கூறுகை யில், “மெட்ரோ ரயில் திட்டம், இரட்டை வழி ரயில் பாதை  திட்டம், ரயில் பாதை மின் மய மாக்கல் போன்ற தமிழகத்தின் திட்டங்களுக்கும், இயற்கை பேரிடர் கால நிவாரணம் மற்றும் மறுவாழ்வு, புனர மைப்பு போன்ற இன்றியமை யாத் தேவைகளுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.வழக்கம் போல பன்னாட்டு குழும நிறுவனங்களுக்கு ஆத ரவுக்கரம் நீட்டி உள்ள நிதிநிலை அறிக்கை, அடித்தட்டு மக்க ளையும், உழைக்கும்மக்களை யும் வஞ்சித்துள்ளது”  என்றார்.

பள்ளிக்கல்விக்கு போதிய நிதி இல்லை

பாமக நிறுவனர் மரு.ராம தாஸ் கூறுகையில், பள்ளிக் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானது அல்ல, ரயில் திட்டங்கள் குறித்தும் நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரி வித்துள்ளனர்.