tamilnadu

img

மனுவாத சித்தாந்தத்தை முறியடிப்போம்! தஞ்சாவூர், நெல்லையில் மாதர் சங்கம் மாபெரும் மாநாடு

தஞ்சாவூர்/திருநெல்வேலி, பிப்.1- “மனுவாத சித்தாந்தத்தை முறியடிப்போம்; சமூக சீர்திருத்த பாரம்பரியத்தை முன்னெடுப்போம்; நுண்கடன் நிதி நிறுவனங்களினால், கடன் வலையில் சிக்கித் தவிக்கும் பெண்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்து” என்ற முழக்கங்களோடு தஞ்சாவூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் டெல்டா மண்டல மாநாடு நடைபெற்றது. இதையொட்டி தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் இருந்து, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு பூமயில் கிராமிய கலைக்குழு பறை இசையுடன் பேரணியாக சென்றனர். இப்பேரணியில், மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ. வாசுகி, கந்தர்வகோட்டை சட்மன்ற தொகுதி உறுப்பினர் எம்.சின்னதுரை, மாநிலத் தலைவர் எ-எஸ்.வாலண்டினா, மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் லதா, மேரி  மாநிலக் குழு உறுப்பினர் கலைச்செல்வி, தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் வசந்தி உட்பட ஏராளமான பெண்கள் பேரணியாகச் சென்றனர். திருநெல்வேலி பெண்கள் மீதான சாதிய வன்முறைகளுக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயகம் மாதர் சங்கம் சார்பில் மாநில சிறப்பு மாநாடு பாளையங்கோட்டை லூர்து நாதன் சிலை  அருகில் பிப்ரவரி 1 அன்று நடைபெற்றது    மாநாட்டிற்கு மாதர் சங்க  மாநில செயலாளர் பி.கற்பகம் தலைமை தாங்கினார், வரவேற்புக்குழு தலைவர் ஆர்.எஸ்.செண்பகம் வரவேற்று பேசினார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் நாகை மாலி, மாதர் சங்க அகில இந்திய  துணைத் தலைவர் பி.சுகந்தி, மாநில பொதுச் செயலாளர் அ.ராதிகா, மத்தியக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், ஆர்.சசிகலா,மாநிலச் செயலாளர் கே.பாலபாரதி ஆகியோர் உரையாற்றினர். மாநாட்டில் சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், போக்சோ சிறப்பு சட்டங்களை முறையாக அமல்படுத்திட வேண்டும், தமிழ்நாட்டில் நடைபெறுகிற சாதிய வன்கொடுமைகளை தடுத்து நிறுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மாதர் சங்க நிர்வாகிகள் மல்லிகா ,உஷா பாசி ,லட்சுமி, ராணி, பூமயில் உட்பட பலர் கலந்து கொண்டனர் மாதர் சங்க மாவட்ட பொருளாளர் பொன்.எழில் நன்றி கூறினார்.