districts

img

தந்தை பெரியார் சிலைக்கு அரசியல் கட்சிகள் மரியாதை

நாகப்பட்டினம், செப்.17 - தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி, டெல்டா மாவட்டங் களில் பல்வேறு இடங்களில் அர சியல் கட்சியினர், வெகுஜன அரங் கத்தினர் அவரது சிலைக்கு மரி யாதை செலுத்தினர். நாகப்பட்டினம் நகரத்தில் மேலக் கோட்டை வாசல் பகுதியில் உள்ள  அவரது சிலைக்கு, சிபிஎம் மாநி லக் குழு உறுப்பினரும், கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினருமான  நாகைமாலி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிபிஎம் நாகை நகரச் செயலாளர் க. வெங்கடேசன், வாலிபர் சங்க  மாவட்டச் செயலாளர் டி.அருள் தாஸ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முகேஷ் கண்ணா,  மாவட்டத் தலைவர் எம்.ஜோதி பாசு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத் தினர்.  திருத்துறைப்பூண்டி திருவாரூர் மாவட்டம் திருத்து றைப்பூண்டி புதிய பேருந்து நிலை யத்தில் உள்ள பெரியாரின் முழு உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன்  மாலை அணிவித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதி பாசு, மாவட்டக் குழு உறுப்பினர் சாமிநாதன், ஒன்றியச் செயலாளர் டிவி காரல் மார்க்ஸ், நகரச் செய லாளர் கோபு, நகர் மன்ற துணைத்  தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும்  50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மன்னார்குடி மன்னார்குடியில் உள்ள பெரி யார் சிலைக்கு சிஐடியு சங்கத்தின் சார்பாக அதன் மாவட்ட துணைத்  தலைவர் ஜி.ரகுபதி மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக  கிளைச் செயலாளர் தியாக சிவ சுப்பிரமணியன் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். தமுஎகச தலைவர் கே.வி. பாஸ் கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பொன்னமராவதி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலை யம் முன்பு நடைபெற்ற விழாவில் திராவிடர் கழக ஒன்றியத் தலை வர் சித.ஆறுமுகம் தலைமை வகித்தார். திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் அடைக்கலமணி மற்றும் ஆலவயல் முரளி சுப்பையா,  சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஏனாதி ராசு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், சிஐடியு நிர்வாகி தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் சுடர்வளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். செம்பனார்கோயில் மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் திமுக சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா  நடைபெற்றது. விழாவையொட்டி மாவட்ட செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்எல்ஏவுமான நிவேதா முருகன் தலைமையில் கட்சியினர், செம்பனார்கோயில் கீழமுக்கூடில் உள்ள பெரியாரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். முன்னதாக கட்சியினர்,  மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அரியலூர் அரியலூர் செட்டி ஏரிக்கரை யிலுள்ள பெரியார் சிலைக்கு, சட்டப் பேரவை உறுப்பினர் கு. சின்னப்பா தலைமையில் மதிமுக மாவட்டச் செயலர் ராமநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.