districts

img

அமித்ஷாவை கண்டித்து காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

அண்ணல் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வெறுப்புணர்வு பேச்சைக் கண்டித்தும், பதவி விலகி கோரியும் சிபிஎம்  காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் வெள்ளியன்று (டிச. 20) காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே.நேரு தலைமையில் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துகுமார், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் சி.சங்கர், டி.ஸ்ரீதர், ஆர்.மதுசூதனன், ஆர்.செளவுந்தரி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.அண்ணாதுரை, ஜெ.பிரதாப்பன் உள்ளிட்ட பலர் பேசினர்.