சென்னை, டிச.20- மண்டல பொருளாதார புலனாய்வு கவுன்சில் (ஆர். இ.ஐ.சி)கூட்டம் சென்னையில் வருமான வரித்துறையின் தமிழ்நாடு புதுச்சேரி தலைமை இயக்குனர் பிரதாப் சிங் தலைமையில் நடைபெற்றது. சட்டத்தை அமலாக்கும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பொருளாதார குற்றங்களை தடுப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்து விவாதித்தனர். லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் தலைமை இயக்குனர் அபய்குமார் சிங் இந்திய வருவாய் துறையின் கூடுதல் தலைமை இயக்குனர் சுபாஷ் அகர்வால், கூடுதல் தலைமை இயக்குனர் கே பாலமுருகன், ,பொருளாதார குற்றங்களுக்கான காவல்துறை துணைத் தலைவர் சத்திய பிரியா சிபிஐ டி ஐ ஜி டாக்டர் சோனல் சந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.