சென்னை, டிச.21- வாடிக்கையாளர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அருகில் மற்றும் தூரத்தில் உள்ளவற்றை தெளிவாக புகைப்படம் எடுக்கும் விதமாக எக்ஸ்200 புரோ, எக்ஸ் 200 என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை விவோ அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவின் முதல் 200எம்பி ஜெய்ஸ் ஏபிஓ டெலிபோட்டோ கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. 100 எக்ஸ் ஹைப்பர்சூம், டெலிபோட்டோ மேக்ரோ, தொழில்முறை டெலிபோட்டோ போர்ட்ரெய்ட் மற்றும் எக்ஸ்ட்ரீம் டெலிபோட்டோ நைட்ஸ்கேப் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது விவோவின் வி3+ இமேஜிங் சிப் உடன் இரட்டை சிப்பைக் கொண்டுள்ளது. சிறந்த செயல்திறனுக்காக மீடியாடெக் டைமன்சிட்டி 9400 உடன் நீண்ட நேரம் பயன்படுத்தும் வகையில் 6000 எம்ஏஎச் செமி-சாலிட் ஸ்டேட் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது.