தஞ்சாவூர், மார்ச் 1- தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் புலவஞ்சி கிராமத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதிய கிளை அமைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை. ஏசுராஜா சிறப்புரையாற்றினார். கிளைத் தலைவராக ஆர்.பெரமையன், செயலாளராக எஸ்.மாணிக்கவாசகம், துணைத் தலைவராக டி. மதியழகன், துணைச் செயலாளராக எம்.சந்தோஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 15-க்கும் மேற்பட்டோர் வாலிபர் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். மதுக்கூர் ஒன்றியம் புலவஞ்சி கிராமத்தில், தெற்குத்தெரு மற்றும் மேலகாலனித் தெரு ஆகிய தெருக்களில் சேதமாகியுள்ள சிமெண்ட் சாலை, தார்ச் சாலை ஆகியவற்றை உடனடியாக மறு சீரமைப்பு செய்து, புதிய சிமெண்ட் சாலை மற்றும் தார்ச் சாலை அமைத்துதர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.