districts

ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் கல்லாத்தூர் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு

அரியலூர், ஆக.16 - ஜெயங்கொண்டம் நகராட்சி யின் வரி வசூலை அதிகரிக்கவே ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க முயல்வதாக குற்றம் சாட்டி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் நகராட்சியை விரிவாக்க  செய்யும் வகையில் அங்கராய நல்லூர் கிழக்கு மற்றும் மேற்கு, புதுச்சாவடி, ஜெயங்கொண்ட சோழபுரம், கீழக்குடியிருப்பு, கல் லாத்தூர் உள்ளிட்ட 5 ஊராட்சி களை ஜெயங்கொண்டம் நகராட்சி யுடன் இணைப்பதற்கான அரசா ணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களின் கருத்தை கேட்க கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலை யில், கல்லாத்தூர் ஊராட்சியை ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து கல்லாத்தூர் கிராம மக்கள் ஒன்று திரண்டு, ஊராட்சி மன்றத் தலைவர் செந்தமிழ்செல்வனை அழைத்துக் கொண்டு அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் காமராஜ், நக ராட்சி அலுவலகத்தில் நகராட்சி மேலாளர் அன்புச்செல்வி ஆகியோ ரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம், தொகுப்பு வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கிராம ஊராட்சிக்கு வழங்கப்படுகிறது. ஆனால் நகராட்சியுடன் இணை யும்போது இவ்வகையான திட்டங்கள் தங்களுக்கு கிடைக் காது. மேலும் ஊராட்சியில் வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்ட குறைந்தபட்ச வரிகளையே செலுத்த  முடியாத ஏழ்மை நிலையில் பெரும் பாலான குடும்பங்கள் உள்ளன.  இந்நிலையில் நகராட்சியுடன் இணையும்போது சொத்து வரி, வீட்டு வரி, தண்ணீர் வரி என பல்வேறு வரிகளை அதிகளவில் கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் கிராம ஊராட்சி மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவோம். ஜெயங்கொண்டம் நகராட்சியில் வரி வசூலை அதிகரிக்கவே அரு கில் உள்ள ஊராட்சிகளை நகராட்சி யுடன் இணைக்க தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.  எனவே எக்காரணத்தைக் கொண்டும் ஊராட்சியை நகராட்சி யுடன் இணைக்க கூடாது. இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து  ஊராட்சி மன்றத் தலைவரோடு இணைந்து தங்களிடம் கடிதத்தை வழங்கி யுள்ளோம். மேலும் ஊராட்சியை நகராட்சியில் இணைப்பதற்கு  தமிழக அரசு தீவிரம் காட்டினால் பல்வேறு போராட்டங்களை நடத்து வோம். தங்களுக்கு வழங்கிய ரேசன் கார்டு, ஆதார் காடு, வாக்காளர்  அடையாள அட்டை உள்ளிட்ட வற்றை அரசிடமே திருப்பி வழங்கு வோம்” என்றனர்.  இதேபோன்று கடந்த வாரம் அங்கராயநல்லூர் கிராம மக்கள், கிராம சபை கூட்டத்தில், மக்களை  திரட்டி ஊராட்சி மன்றத் தலைவரி டம் மனு அளித்தனர்.