districts

img

தேவ. பேரின்பனின் 11ஆவது ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

தருமபுரி, செப். 18- மார்க்சிய அறிஞர் தேவ. பேரின் பனின் 11 ஆவது ஆண்டு நினைவு நாள்  கருத்தரங்கம் மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் தருமபுரியில் செவ்வா யன்று நடைபெற்றது.  தருமபுரி மாவட்டம் முத்து  இல்ல நினைவு அறக்கட்டளை அலு வலகத்தில் நடந்த இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அருச்சுணன் தலைமை வகித் தார். இந்நிகழ்வில் மாவட்ட செயலா ளர் ஏ.குமார், மூத்த தலைவர் பி. இளம்பரிதி உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். இதில், மார்க்சிஸ்ட்  கட்சியின் மாநிலக் குழு உறுப்பி னர் இரா.சிந்தன் “தமிழ்நாடு சந் திக்கும் சவால்களும் மார்க்சிய மும்” என்ற தலைப்பில் உரையாற்றி னார். இரா.சிந்தன் தனது உரையில், தேவ.பேரின்பன் தமிழ் சமூகத்தின் வர்க்கப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்த முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சமூகத்தின் வளர்ச்சிப் போக்கை மார்க்சிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண் டியதன் அவசியத்தை வலியுறுத்தி னார். உற்பத்தி முறைகளில் ஏற்ப டும் மாற்றமே மனித சமூக வளர்ச்சி யின் அடித்தளமாக உள்ளது என் றும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களை அடையாளம் காண வேண்டும் என்றும் கூறினார். தேவ. பேரின்பனின் ஆய்வுப் பணி களை தற்காலப்படுத்த வேண்டிய தன் அவசியத்தையும், நவீன வளர்ச் சிப் போக்குகளோடு இணைத்து முன்னெடுக்க வேண்டியதன் தேவையையும் இரா.சிந்தன் சுட்டிக் காட்டினார்.  மேலும், மொழியின் முக்கியத் துவம் அதன் தொன்மையில் மட்டு மல்ல, அதன் பயன்பாட்டிலும் வளர்ச்சியிலும் உள்ளது என்றார்.  தேசியம் என்பது முதலாளித்துவத் தின் சுரண்டலை மறைக்கும் போர்வை என்றும், அறிவியல் பூர்வ மான பார்வையை மழுங்கடிப்பதே தேசியம் என்றும் விமர்சித்தார். தற் போதைய சமூக-பொருளாதார நிலை குறித்தும் இரா. சிந்தன் கருத்து தெரிவித்தார். கல்வி அனை வருக்கும் உரிமையாக இல்லாமல்  வணிகமயமாக்கப்பட்டுள்ளதை யும், கிராமப்புற விவசாயம் வீழ்ச்சி யடைந்துள்ளதையும் சுட்டிக் காட்டினார். விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருவாய் 9 சதவீ தத்துக்கும் கீழே சென்றுள்ளதாக வும், விவசாயிகள் வேறு தொழில் களுக்குச் செல்லும் நிலை ஏற்பட் டுள்ளதாகவும் குறிப்பிட்டார். வேலையின்மை மற்றும் குடிப் பெயர்வு அதிகரித்து வருவதை யும் கவலையுடன் தெரிவித்தார். முடிவாக, உழைக்கும் வர்க்கத் திற்காக வாழ்ந்த தேவ. பேரின்ப னின் இலக்குகளையும் லட்சியங் களையும் முன்னெடுப்பது நமது கடமை என இரா. சிந்தன் வலியு றுத்தினார்.  முன்னதாக பாப்பாரப்பட்டியை அடுத்த கிட்டம்பட்டி கரடிகுன்று பகுதியில் உள்ள தேவ.பேரின் பன் நினைவிடத்தில் கட்சித் தலை வர்கள் மலர் வளையம் வைத்து மரி யாதை செலுத்தினர்.