states

img

சந்தீப் கோஷின் மருத்துவப் பதிவு ரத்து!

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் மருத்துவப் பதிவை மேற்கு வங்க மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது. 
பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், சந்தீப் கோஷ் நிதி முறைக்கேடு மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது  தெரியவந்தது. இந்த நிலையில், சந்தீப் கோஷின் மருத்துவப் பதிவை மேற்கு வங்க மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது.