tamilnadu

img

பொய் சொல்லி உறுப்பினர்களை சேர்த்த பாஜகவினர்!

நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக கூறி தொலைபேசி எண்களை வாங்கிவிட்டு பாஜகவில் உறுப்பினராக இணைத்துவிட்டதால் மக்கள் அதிர்த்தியடைந்தனர்.

பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் என்பது தற்போது பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுப்பதன் மூலம் உறுப்பினர் சேர்க்கும் இயக்கத்தை பாஜகவினர் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் பாஜகவினர் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் நலத்திட்ட உதவிகள் வழங்க இருக்கிறோம்,  தீபாவளிக்கு பரிசுகள் கொடுக்கிறோம், அறக்கட்டளையில் இணைக்கிறோம் எனக் கூறி பொதுமக்களிடம் தொலைபேசி எண்களை வாங்கியுள்ளனர்.

தொலைபேசி எண்களை கொடுத்த பொதுமக்களுக்கு சிறிதுநேரத்தில் பாஜகவில் இணைந்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.