districts

img

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி. சார்பில் உறுப்பினரை நியமித்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்கலைக் கழகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

ஆர்ப்பாட்டத்தில் இதுவரை உள்ள மரபுகளை மீறி ஆளுநர் புதிதாக யு.ஜி.சி.சார்பில் உறுப்பினரை நியமித்து உள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. பல்கலைக் கழக விதிகளை மீறியும், தமிழக கல்வி அமைச்சரை ஆலோசிக்காமலும் அவர் தன்னிச்சையாக உறுப்பினரை நியமித்ததைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் மாணவர்கள் பட்டம் பெறுவதற்கு பல்வேறு பல்கலைக் கழகங்களில் காத்து இருக்கின்றனர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் உள்பட பல்வேறு பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழாவிற்குத் தேதி வழங்காமல் ஆளுநர் ரவி தாமதப்படுத்தி வருகிறார். மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ். நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துணைவேந்தர் தேடுதல் குழுவில் உள்ள யு.ஜி.சி.உறுப்பினரைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், முன்னதாக அவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.