districts

திருச்சி முக்கிய செய்திகள்

நாளை பேராவூரணியில் மின்தடை

தஞ்சாவூர், செப்.19 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் செப்டம்பர் 21 ஆம் தேதி சனிக்கிழமை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், செப்டம்பர் 21 ஆம் தேதி சனிக்கிழமை பேராவூரணி நகர், சேதுபாவாசத்திரம், பெருமகளூர், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக் கொல்லைக்காடு, திருவத்தேவன், ஆவணம், சித்துக்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூர், செருவாவிடுதி, ரெட்டவயல், நாட்டா ணிக்கோட்டை, கள்ளம்பட்டி, கழனிவாசல், பள்ளத்தூர், நாடியம், மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம், செரு பாலக்காடு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி  முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக் கண்ணன் தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் சிறப்பு மனு முகாமிற்கு வர பேருந்து வசதி போலீஸ் எஸ்.பி.,தகவல்

பெரம்பலூர்,செப்.19- பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம் செப்டம்பர் 18 புதன்கிழமையன்று நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர், மற்றும் காவல்துறையினர் பொது மக்களிடம்  நேரடியாக மனுவைப் பெற்றனர். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 41 மனுக்கள்  பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடை பெறும். பொது மக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மாவட்ட காவல் அலுவலகம் வருவதற்கு ஏதுவாக மாவட்ட காவல்துறை சார்பாக பாலக்கரையிலிருந்து காவல் அலுவலகத்திற்கும் மீண்டும் காவல் அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். இம் முகாமில்  மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

16 விவசாயிகளுக்கு ரூ.11.20 லட்சம் இழப்பீடு  வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

தஞ்சாவூர், செப்.19 -  பயிர் இழப்பீடு வழங்கு வதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக பாதிக்கப்பட்ட 16 விவசாயிகளுக்கு மொத் தம் ரூ. 11.20 லட்சம் வழங்கு மாறு தனியார் வங்கிகளுக் கும் காப்பீட்டு நிறுவனத்துக் கும் தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் எழில ரசி, தமிழ்செல்வி, புவனேஸ் வரி, சுந்தர், சாந்தி, சாந்த லெட்சுமி, மனோகரன், கமலா, சக்கரவர்த்தி, சண் முகம், அம்சவள்ளி, அனிதா, ரமேஷ், சாமிநாதன், மணி வண்ணன், சுதந்திரமாறன் ஆகிய 16 பேர் தனியார் வங்கியில் 2016 - 17 ஆம் ஆண்டில் விவசாயக் கடன் பெற்று, பயிர்க் காப்பீடும் செய்தனர்.  இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட 16 விவசாயிக ளுக்கும் இழப்பீடு வழங்குவ தில் கால தாமதம் ஏற் பட்டது. இது தொடர்பாக தஞ்சா வூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் பாதிக்கப்பட்ட 16 விவசாயி களும் 2020 ஆம் ஆண்டு புகார் மனு தாக்கல் செய்த னர். இதை ஆணையத் தலை வர் த.சேகர், உறுப்பினர் கே.வேலுமணி ஆகியோர் விசாரித்து, பாதிக்கப்பட்ட 16 விவசாயிகளுக்கு வழங் கப்பட வேண்டிய காப்பீடு இழப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் 2020, ஜூன் 15 ஆம் தேதி வழங்கி யது என்றும், இத்தொகை யை வங்கி 2024, ஜூன் 16 ஆம் தேதி வழங்கியது எனவும், இதனால் ஏற்பட்ட ஏறக் குறைய 8 ஆண்டு கால தாமதத்துக்காக இழப்பீடாக ஒவ்வொரு விவசாயிக்கும் தனியார் வங்கி தலா ரூ. 25 ஆயிரமும், காப்பீட்டு நிறு வனம் தலா ரூ. 25 ஆயிரமும் என மொத்தம் ரூ. 8 லட்ச மும், இந்த இழப்பீட்டுத் தொகைக்கு மனு தாக்கல் செய்த தேதியான 2020, ஜனவரி 4 ஆம் தேதி முதல் தொகையைத் திரும்ப வழங்கும் தேதி வரை 9 சத வீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும், வழக்கு செலவுத் தொகை யாக வங்கியும், காப்பீடு நிறு வனமும் தனித்தனியாக தலா ரூ. 10 ஆயிரம் வீதம் 16 விவ சாயிகளுக்கு மொத்தம் ரூ. 3.20 லட்சமும் வழங்குமாறு புதன்கிழமையன்று தீர்ப்ப ளித்தனர்.

தஞ்சை மாவட்ட ஆறுகளில் அதிக நீர்வரத்து
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க  ஆட்சியர் அறிவுறுத்தல்

தஞ்சாவூர், செப்.19 -  தஞ்சாவூர் மாவட்ட ஆறுகளில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் முழு கொள்ளளவும், கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் பகுதியாகவும் செல்கின்றது.  பொதுமக்கள் யாரும் ஆழமான நீர்நிலைப்பகுதிகளில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலோ ஈடுபட வேண்டாம். ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள இடங்களிலும், அபாயகரமான இடங்களிலும் தன்படம் (Selfie) எடுப்பதையும் இரவு நேரங்களில் ஆற்றில் இறங்குவதையும் தவிர்த்திட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் ஆற்றில் ஆழமான பகுதியில் இறங்கி குளிக்கச் செல்லக்கூடாது. சில நேரங்களில் ஆறுகளில் சுழல் ஏற்பட்டு அதில் மாட்டிக்கொள்ள நேரிடும். வெளியூரிலிருந்து வரும் நபர்கள் ஆற்றில் குளிக்கச் செல்லும்போது உள்ளூர் பொதுமக்கள் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். குழந்தைகளை நீர்நிலைகளுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். கால்நடைகளை ஆழமான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லாமல் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். ஆற்றின் கரைப் பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஆற்றில் இறங்குவதை பொதுமக்கள் முற்றிலும் தவிர்த்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

சொத்து தகராறில் உறவினரைக் கொன்ற  
பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தஞ்சாவூர்,செப்.19 –  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே வடசேரியை  சேர்ந்தவர் உத்திரா பதி. இவரது அண்ணன் ராமமூர்த்தி, தம்பி  சின்னப்பா. இந்நிலையில் ராமமூர்த்தி மனைவி பிரேமாவதி (50), சின்னப்பா ஆகியோர் உத்திராபதியிடம் சொத்தில் பங்கு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில், பிரேமாவதி தூண்டுதல் பேரில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி தனது அண்ணன் உத்திராபதியிடம், சின்னப்பா சொ‌த்து கேட்டு தகராறு செய்தார். அப்போது உத்திராபதியை வெட்டிக்கொலை செய்தார். இது குறித்து உத்திராபதியின் மகள் சுமித்ரா அளித்த புகாரின் பேரில் பாப்பா நாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சின்னப்பா மற்றும் கொலைக்கு தூண்டுதலாக இருந்த பிரேமாவதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பட்டுக்கோட்டை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கின் முதல் குற்றவாளியான சின்னப்பா கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து இரண்டாம் எதிரி யான பிரேமாவதி வழக்கில் முதல் நபராக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், புதன்கிழமை பட்டுக் கோட்டை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மணி வழக்கினை விசாரணை செய்து, பிரேமாவதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை, இரண்டா யிரம் ரூபாய் அபராத தொகையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர், ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் மற்றும் நீதி மன்ற தலைமைக் காவலர் புனிதா ஆகி யோரை தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் வெகுவாக பாராட்டினார்.

மின்னணு பணப் பரிவர்த்தனையில் இடுபொருட்களை பெறலாம்

பாபநாசம்,செப்.19-                    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் முகமது பாரூக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: பாபநாசம் வட்டாரத்தில் சம்பா பருவத்திற்குத் தேவை யான நெல் விதையில் உயர் விளைச்சல் ரகம், ஆடுதுறை 54, நுண்ணூட்டக் கலவைகள், நுண்ணுயிர் உரங்கள், பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குத் தேவையான வம்பன் 8 உளுந்து பயிறு வகை பயிர்க ளின் விதைகள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. இந்த வேளாண் இடு பொருட்கள் பல்வேறு திட்டங்களின் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. விவசாயிகள் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் போது பணமில்லா பரிவர்த்தனை அதாவது வங்கி பற்று அட்டை அல்லது கடன் அட்டை, கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் வாயிலாக மின்னணு பணப் பரிவர்த்த னை மூலம் இடுபொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

திருநங்கையர்கள் கல்வி உதவித்தொகை பெறலாம் மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை,செப்.19-  மயிலாடுதுறை மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கையர்களில் கல்வி பயின்று இடையில்  நிறுத்திய திருநங்கைகளை கண்டறிந்து அவர்களின்  கல்வி தரத்தை உயர்த்துவதற்கு தகுதியான திருநங்கையர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற மாவட்ட சமூகநல அலுவ லகத்தை அனுகி பயன்பெற மாவட்ட ஆட்சித்தலைவரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.  உயர்கல்வியில் சேரும் அனைத்து திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு கல்வி கட்டணம், விடுதிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவினங்களை தமிழ்நாடு  திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் வழங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள படிப்புகள் அல்லாத பிற படிப்புகளில் உயர்கல்வி பயிலும்  திருநங்கைகளுக்கு தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் அனுமதியுடன்  ஒப்பளிக்கப்பட்டுள்ள தொகைக்கு மிகாமல் நிதியுதவி வழங்கப்படும். மேற்காணும் தகுதியுள்ள திருநங்கையர்கள், திருநம்பி கள் உரிய  விவரங்களுடன்; மாவட்ட சமூகநல அலு வலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக 5வது தளம், மன்னம்பந்தல், மயிலாடு துறை மாவட்டம். தொலைபேசி எண்: 04364 - 212429 என்ற முகவரிக்கு நேரில் வந்து  உரிய ஆவணங்களுடன் நேரில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர்  ஏ.பி.மகாபாரதி  தெரிவித்துள்ளார்.

குரூப்- 4 பணியிடங்கள் அதிகரிப்பு

சென்னை,செப்.19- குரூப் 4 காலி பணியிடங்களை அதிகரிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தகவல் தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 30-ல் தொடங்கி பிப்ரவரி. 26ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9 அன்று நடந்தது. தேர்வுக்குப் பின் குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6,724ஆக உயர்ந்துள்ளது.

ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு 

திருநெல்வேலி ,செப். 19- நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் ஹென்றி செல்வன் ராஜ்குமார். இவர், மாண விக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இது  குறித்து மாணவியின் பெற்றோர் பாளை. தாலுகா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். அதன்பேரில், ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின்  கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வரு கின்றனர். இதனிடையே, பள்ளியின் நிர்வாகம் அந்த ஆசி ரியரை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.

வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் கிரயப்  பத்திரம் பெறலாம் : வீட்டுவசதி வாரியம் அறிவிப்பு

தஞ்சாவூர், செப்.19 -  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தஞ்சாவூர் வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள திட்டப்பகுதிகளில் வீடுகள் ஒதுக்கீடு பெற்று, மாவட்ட ஆட்சி யர் மற்றும் இதர வங்கி, நிறுவனங்கள் மூலம் வீட்டு கடன் பெற்று முழுத்தொகை யும் செலுத்தியுள்ள அரசு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர வங்கி, நிறுவனங்களில் இருந்து மறுப்பின்மை  சான்று பெற்று உரிய ஆவணங்களு டன் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் சமர்ப்பித்து கிரயப்பத்திரம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது.  மேலும், மேற்கண்ட திட்டப்பகுதிகளில் வீடு மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்ற  ஒதுக்கீடுதாரர்கள் தங்களது ஒதுக்கீடு தொ டர்பான அனைத்து அசல் ஆவணங்கள், ஆதார் அடையாள அட்டை நகல் மற்றும் பிற ஆவணங்களுடன் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் முதலான வற்றுடன், நேரில் வரப்பெற்று கணக்கு களை நேர் செய்து கிரயப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம்.  மேலும் மேற்கண்ட திட்டப்பகுதிகளில் மனைகள் மற்றும் வீடுகள் ஒதுக்கீடு பெற்று தவணை காலம் முடிவுற்றும் பல முறை தாக்கீதுகள் அனுப்பியும் நிலுவை வைத் துள்ள அனைத்து ஒதுக்கீடுதாரர்களும் நிலுவை தொகை முழுவதையும் ஒரே தவணையில் செலுத்தி கிரயப்பத்திரம் பெற்றிடலாம்.  தவணைக் காலம் முடிவுறாத ஒதுக்கீடு தாரர்கள் மாத தவணையில் நிலுவை வைத்திருப்பின் உடனடியாக செலுத்திட வேண்டும். தவறும் பட்சத்தில் நிலுவை வைத்துள்ள அனைத்து ஒதுக்கீடுதாரர் களது ஒதுக்கீடுகளும் ரத்து செய்யப்பட வுள்ளதால், ஒதுக்கீடுதாரர்கள் இவ்வறி விப்பை கண்டவுடன் அசல் ரசீதுகளுடன் தஞ்சாவூர் வீட்டு வசதி பிரிவு அலுவல கத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொண்டு கணக்கினை நேர் செய்து, நிலுவைத் தொகைகளை செலுத்தி வாரிய விதிமுறைகளின்படி கிரயப்பத்தி ரம் பெற்றுக்கொள்ளுமாறும், ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்யும் நடவடிக்கையை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.