districts

img

15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தல்

திருப்பூர், செப்.18 - 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை துவக்கி உடனடியாக முடிக்க வலியுறுத்தி புதனன்று தொழிற்சங்கத்தினர் அரசு போக்குவ ரத்து திருப்பூர் மண்டல அலுவலகம்  முன்பு கோரிக்கை விளக்க கூட்டம் நடத்தினர். அரசு போக்குவரத்து ஊழியர் சங்க சிஐடியு மண்டலத் தலைவர் எம். கந்தசாமி தலைமையில், திருப்பூர் மண்டல அலுவலகம் முன்பு சிஐடியு,  ஏஐடியுசி, டிடிஎஸ்எப், எஎஎல்எல்எப் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் கோரிக்கை விளக்க கூட்டம் புதன்கி ழமை நடைபெற்றது. இதில், 2022  டிசம்பர் முதல் ஓய்வு பெற்ற தொழி லாளர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். 2003க்கு பின் பணியில் சேர்ந்த தொழி லாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூ திய திட்டத்தில் இணைத்திட வேண் டும். அரசாணை 142ஐ ரத்து செய்து,  ஓய்வூதியரின் 108 மாத அகவிலைப் படி உயர்வை வழங்கிட வேண்டும். ஒப்பந்த முறையில் ஆட்கள் எடுப் பதை கைவிட்டு காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும். தனியார்மய  நடவடிக்கையை கைவிட வேண்டும். சங்கங்களை முறைப்படுத்தி முறை யான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும். பணியில் இருக் கும் தொழிலாளர்களுக்கு அகவி லைப்படி நிலுவைத் தொகையை  வழங்க வேண்டும். 15ஆவது ஊதிய  ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்கி உடனடியாக முடிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில், சிஐடியு மண்டலப் பொதுச்செயலாளர் பி.செல்லத் துரை, ஏஐடியுசி மண்டலத் தலைவர்  பி.கந்தசாமி, சிஐடியு துணை  பொதுச்செயலாளர் வி.விஸ்வநா தன், ஏஐடியுசி ஜெ.துரைசாமி, டிடி எஸ்எப் செந்தமிழ், ஏஐடியுசி கோவை  மண்டல செயலாளர் சண்முகம், டிடி எஸ்எப் மாநிலத் தலைவர் டி.கே.பால கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஏஐடியுசி செய லாளர் ஜெயக்குமார் நன்றி கூறி னார்.