districts

img

ஊழியர் விரோதப் போக்கில் மாவட்ட நிர்வாகம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், செப் 18- ஊழியர் விரோதப் போக்குடன் செயல்படும் மாவட்ட நிர்வாகங்க ளின் நடவடிக்கையை கண்டித்து சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சிவகங்கை மற்றும் மதுரை மாவட்ட ஆய்வுக் கூட்டங்களில் பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற போதிய நிதி ஒதுக்கீடு இல்லை  என்று பதில் அளித்த காரணத்திற்காக வும் கடுமையான பணிச்சுமைகளின் மன அழுத்தத்தின் காரணமாகவும் உரிய பதிலை அளிக்காத நிலை யினை கருத்தில் கொள்ளாமல் சிவ கங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட் டார வளர்ச்சி அலுவலரை மாவட்ட நிர் வாகம் தற்காலிக பணி நீக்கம் செய் துள்ளதும், மதுரை மாவட்ட நிர்வா கம் செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிட மாறுதல் செய் துள்ளது. அற்பக் காரணங்களுக்காக தற்கா லிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வி. சோமதாஸ் அவர்களின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்திடவும். மதுரை மாவட்டம்  செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா அவர்களின் பணியிட மாறுதலை உடனே ரத்து செய்திடவும். தமிழ் நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவ லர் சங்கத்தின் சார்பாக சேலம் மாவட் டத்தில் உள்ள 21 வட்டார கிளைகளி லும் வட்டத் தலைநகரிலும் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் சங்கத் தின் மாநிலத் துணைத் தலைவர் ந. திருவேரங்கன், மாவட்டச் செயலா ளர் ஜான் ஆன்ஸ்டீன் மாநில செயற் குழு உறுப்பினர் வடிவேல் உள் ளிட்டு பலர் பங்கேற்றனர். தருமபுரி இதேபோன்று, தமிழ்நாடு ஊரக  வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத் தின் சார்பில் தருமபுரி மாவட்டம் முழு வதும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் சங்கத் தின் மாநிலதுணைத்தலைவர் ஆறு முகம், மாவட்டத் தலைவர் முகமது  இலியாஸ், மாவட்டச் செயலாளர் தரு மன், பொருளாளர் வினோத்குமார். வட்டார வளர்ச்சி அலுவலர்களின் ஒருங்கிணைப்பாளர் சா.இளங்கும ரன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் உள்ளிட்ட  தலைவர்கள் உரையாற்றினர்.