districts

img

ஒரே அமரர் ஊர்தியில் இரண்டு சடலங்களை அனுப்ப முயற்சி: உறவினர் எதிர்ப்பால் தனித்தனி ஊர்தியில் அனுப்பி வைப்பு

திருப்பூர், செப். 18 - திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஒரே அமரர் ஊர்தியில் இரண்டு சடலங் களை அனுப்ப நிர்வாகத்தினர் ஏற்பாடு  செய்தனர். இதில் இறந்த ஒருவரின் தந்தை ஆட்சேபணை தெரிவித்து சமூக  வலைதளத்தில் கருத்து வெளியிட்ட நிலையில், இரு சடலங்களும் தனித்தனி  அமரர் ஊர்திகளில் அனுப்பி வைக்கப் பட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த பாண்டி பிரபு  என்பவர் தற்கொலை செய்து கொண்ட தாக திருப்பூர் வடக்கு காவல் நிலை யத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட் டது. இந்த வழக்கு தொடர்பாக திருப்பூர்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னையில் பாண்டி பிரபு உடல் கூராய்வு நடைபெற்றது. இதையடுத்து அவரது தந்தை துரைராஜிடம் பாண்டி பிரபு வின் சடலம் ஒப்படைக்கப்பட்டது. அவ ரது சொந்த ஊருக்கு கொண்டு செல்வ தற்காக அமரர் ஊர்திக்கு அவர் பதிவு செய்திருக்கிறார். இந்த நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஓர் அம ரர் ஊர்தியில் விருதுநகருக்கு கொண்டு  செல்வதற்காக மற்றொரு உடல் ஏற்றப் பட்டிருந்தது. இந்த நிலையில் பாண்டி பிரபுவின் உடலும் விருதுநகர் தாண்டி அருப்புக் கோட்டைக்கு கொண்டு செல்ல வேண்டியிருப்பதால் அதே அமரர் ஊர்தியில் ஏற்றிச் செல்லும்படி மருத்துவமனை தரப்பில் கூறியதாகத் தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த துரை ராஜ், அரசு மருத்துவக் கல்லூரி வளாகத் தில் அடுத்தடுத்து மூன்று அமரர் ஊர்தி கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தனது மகன் பாண்டி பிரபு உடலை ஓரே  அமரர் ஊர்தியில் வேறொருவர் சடலத் தைக் கொண்டு செல்வதுடன் எடுத்துச்  செல்ல வற்புறுத்துவதாக பதிவு செய்து  சமூக ஊடகத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் மருத்துவமனை தரப்பினர் துரைராஜிடம்  பேச்சு வார்த்தை நடத்தி, வேறொரு தனி அமரர்  ஊர்தியை ஏற்பாடு செய்து, பாண்டி பிரபு வின் சடலத்தை தனியாகக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர். மருத்துவக் கல்லூரி முதல்வர் விளக்கம்: இந்த சம்பவம் குறித்து திருப்பூர்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வர் மருத்துவர் முருகே சன் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது, அமரர் ஊர்தி சேவை என் பது மாநில அளவில் தனியான கால் சென்டர் முறையில் செயல்படுகிறது. அங்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் தான் அமரர் ஊர்தியை அனுப்ப ஏற்பாடு  செய்வார்கள். இதற்கும், மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கும் நேரடித் தொடர்பு கிடையாது.  இங்கு நாளொன்றுக்கு 10 சடலங்கள்  வரை அமரர் ஊர்தியில் அனுப்பி வைக் கப்படுகிறது. எனவே அமரர் ஊர்தி களை இங்கு நிறுத்தி வைக்க இடம் ஒதுக்கி இருக்கிறோம். அப்போதும் தொலை தூர ஊர்களுக்கு ஒரே வழித்த டத்தில் செல்வதாக இருந்தால், சம்பந் தப்பட்ட உறவினர்களிடம் ஒப்புதல் பெற்று ஒரே அமரர் ஊர்தியில் அனுப்பி  வைப்பதுண்டு. மற்றபடி தனித்தனி அமரர் ஊர்திகளில் தான் சடலங்களை அனுப்பி வைப்பது வழக்கம். இதில் வேறெந்த பிரச்சனையும் இல்லை, என்று மருத்துவர் முருகேசன் கூறி னார்.