districts

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திடுக ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு ஆர்ப்பாட்டம்

ஈரோடு, செப். 18- புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட் டத்தை நடைமுறைப்படுத்த வலியு றுத்தி, தேசிய ஓய்வூதியர் சங்கங்க ளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நாடு முழுவதும் புதனன்று ஆர்ப்பாட் டம், தர்ணா உள்ளிட்ட இயக்கங்கள் நடைபெற்றது.  புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும்  ஒருங்கிணைந்த ஓய்வதிய திட் டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூ திய திட்டத்தை அமலாக்க வேண்டும்.  மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 ஆவது ஊதியக் குழுவை உடனே அமைக்க வேண்டும். பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு ஜனவரி 2017 முதலாக ஓய்வூதிய மாற்றம் செய்ய வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணக் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். 65  வயது முதல் கூடுதல் ஓய்வூதியம்  வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை இந்த இயக்கங்க ளில் வலியுறுத்தப்பட்ட்டது. ஈரோடு தலைமை தபால் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, ஓய்வூதியர் அமைப்புகளின் மாவட்டத் தலைவர் ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். இதில், மாவட் டச் செயலாளர் பி.சின்னசாமி, ஆர்எம் எஸ் ஓய்வூதியர் சங்க கோட்டச் செய லர் என்.ராமசாமி, ஏஐபிடிபிஏ மாவட்டப் பொருளாளர் வி.மணியன் உள்ளிட்டோர் உரையாற்றினர். முடி வில், மாவட்டப் பொருளாளர் ஜெ. பாலமோகன்ராஜ் நன்றி கூறினார். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் டி.பாஸ்கரன் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலா ளர்  சுப்பிரமணியன், அரசு அனைத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.பெரு மாள், போக்குவரத்து ஓய்வூதியர் சங்கத்தின் மாநில இணைச் செயலா ளர் கே.குப்புசாமி, பிஎஸ்என்எல் ஓய் வூதியர் சங்கத்தின் மாநில அமைப்புச்  செயலாளர் ஆர்.கோபாலன், அஞ்ச லக ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எம்.இராமலிங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் பி.கிருஷ் ணன், மின்வாரிய ஓய்வூதியர் நல அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர். சுந்தரமூர்த்தி, அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ஏ.சோம சுந்தரம் உள்ளிட்டோர் உரையாற்றி னர். கோவை தேசிய ஓய்வூதியர் சங்கங்களின்  ஒருங்கிணைப்புக் குழு (என்சிசிபிஏ) சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர்  அலுவலக அருகில் உள்ள பிஎஸ்என் எல் மெயின் தொலைபேசி வளாகத் தில் புதனன்று தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர். இப்போராட்டத் திற்கு, வருமானவரித்துறையின் ஓய்வூதியர் சங்க டி.எல்.வெங்கட் ராமன் தலைமை வகித்தார். அகில  இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூ தியர் சங்க மாவட்டப் பொருளாளர் என்.பி.ராஜேந்திரன், அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூ தியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. குடியரசு, அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூ தியர் சங்க மாவட்டச் செயலாளர் டி. சிவராஜ், தேசிய ஓய்வூதியர் சங்கங் களின் ஒருங்கிணைப்புக் குழு செய லாளர் எம்.திருமூர்த்தி உள்ளிட் டோர் உரையாற்றினர். முடிவில், பங்கஜவல்லி நன்றி கூறினார்.