districts

img

ஓசோன் படலத்தை பாதுகாக்க அதிக மரக்கன்றுகளை நட வேண்டும்

அரியலூர், செப்.16 - உலக ஓசோன் தினத்தை யொட்டி அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய  பசுமைப் படை சார்பில் விழிப் புணர்வு நிகழ்ச்சி திங்கள் கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, அப்பள் ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை  வகித்து, “சூரியனின் கதிர் வீச்சிலிருந்து வெளிப்படும் புறஊதா கதிர்களை வடிகட்டும் பாதுகாப்பு கவசம் தான் ஓசோன் படலம். தொழிற்சாலை பெருக்கம், வாகன பெருக்கம், அதிகப்படி யான ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன் படுத்துதல் போன்றவற்றின் மூலம் இந்த ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது. ஓசோன்  படலம் சிதைவதால் தனிப்பட்ட எந்த ஒரு நாடு  மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிற்கே பேர ழிவை ஏற்படுத்தும். எனவே உலகில் உள்ள  ஒவ்வொரு மனிதர்களும் ஓசோன் படலத்தை  பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அதன் முதல் முயற்சியாக அனை வரும் அதிகமான மரக்கன்றுகளை நட வேண்டும்” என பேசினார். முன்னதாக ஓசோன் தினத்தையொட்டி நடைபெற்ற ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாண விகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இலுப்பையூரில் விழிப்புணர்வு பேரணி இலுப்பையூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி, பசுமைப்படை சார்பில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயராணி தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக அவர் மரக்கன்றுகளை நட்டுவைத்து, விழிப்புணர்வுப் பேரணியை தொடக்கி வைத்தார். பேரணியில் கலந்து  கொண்ட மாணவ, மாணவிகள் கிராமங்களின்  முக்கிய தெருக்களின் வழியாக ஓசோன் படலம் குறித்து முழக்கமிட்டவாறு சென்றனர்.