districts

img

மகாத்மா காந்தி நினைவு நாள் உறுதிமொழி ஏற்பு

கோவை, ஜன.30- தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி வியாழன்று,  கோவை மக்கள் ஒற்றுமை மேடை உள் ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில்  மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலியை செலுத்தினர். தேசதந்தை மகாத்மா காந்தி 1948  ஆம் ஆண்டு  ஜன.30 ஆம் தேதியன்று  ஆர்எஸ்எஸ் அமைப்பின் நாதுராம்  கோட்சேவால் சுட்டுக்கொல்லப் பட்டார். தேச ஒற்றுமைக்காக உயிரை தியா கம் செய்த மகாத்மாவின் நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் மக்கள்  ஒற்றுமை மேடையின் சார்பில் அனுச ரித்து வருகின்றனர். இதன்ஒருபகுதி யாக, கோவை, டாடாபாத் பகுதியில் நினைவேந்தல் மற்றும் மலரஞ்சலி, உறு மொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கோவை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங் கிணைப்பாளர் கே.எஸ்.கனகராஜ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ். கிருஸ்ணமூர்த்தி, முன் னாள் சட்ட மன்ற உறுப்பினர் யு.கே. வெள்ளியங்கிரி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.அஜய்குமார், என். ஆறுச்சாமி, என்.ஆர்.முருகேசன், வி. இராமமூர்த்தி மற்றும் மாவட்ட குழு  உறுப்பினர்கள், இடைக்குழு செயலா ளர்கள் மற்றும் இந்திய ஒற்றுமை இயக் கம் தலைவர் டாக்டர். டென்னிஸ் கோவில்பிள்ளை, தமிழ்நாடு திராவிடர்  சுயமரியாதை இயக்கம் தலைவர் நேரு தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இதில், மதச்சார்பற்ற அரசு எனும் கோட்பாட்டை காத்து நிற்போம், சுய சார்பு பொருளாதாரத்தை உயர்த்தி  பிடிப்போம், தீண்டாமையை துடைத் தெறிவோம், பெண்ணுரிமையை காத்து  நிற்போம், தேசவிரோதிகளின் சதி வேலைகளை முறியடிப்போம் என உறு திமொழி எடுத்துக்கொண்டனர். இந் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோன்று பொள்ளாச்சி பேருந்து நிலையம் அரு கில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்வு விவசாயத் தொழிலாளர் சங் கம் உள்ளிட்ட அமைப்புகளால் நடை பெற்றது. இதில், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் கே.மகாலிங்கம், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ச.ஜெக நாதன், சிஐடியு தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரிய தொழிலாளர் சங்க மாவட் டச் செயலாளர் ஆர்.சரவணன் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  தருமபுரி சமூக நல்லிணக்க மேடை சார்பில்  தருமபுரியில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு வியாழனன்று மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சமூக நல்லிணக்க மேடை ஒருங்கிணைப்பாளர் பொ.மு.நந்தன் தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் அ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். மாரிமுத்து, சோ.அருச்சுணன், நகரச்  செயலாளர் ஆர்.ஜோதிபாசு, சிறு பான்மை நலக்குழு மாவட்ட பொறுப்பா ளர் எஸ்.கிரைஸாமேரி, மாதர் சங்க நிர் வாகிகள் சுபா, தமிழ்மணி சுசிலா, மாற் றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி தமிழ்  செல்வி, விசிக மண்டல துணைச்செய லாளர் மின்னல் சக்தி, தருமபுரி தொகுதி  செயலாளர் கா.சக்தி, மனிதநேய மக்கள்  கட்சி மாவட்டத் தலைவர் என்.சுபே தார், செயலாளர் டி.பி.பைரோஸ், துணைத்தலைவர் ஷாஜகான் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் இதேபோன்று, சேலம் பழைய  பேருந்து நிலையம் அருகே உள்ள  காந்தி சிலை முன்பு, மக்கள் ஒற்றுமை  மேடை சார்பில், ‘மதவெறியை மாய்த்து  மத நல்லிணக்கத்தை காப்போம்’ என்ற  உறுதி மொழி ஏற்கப்பட்டது. அமைப் பின் ஒருங்கிணைப்பாளர் எம்.சேதுமாத வன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், ஒருங்கினைப்புக்குழு உறுப்பினர்கள் சேவியர், ஷேக்முக மது, குழந்தைவேல், ஜோதிலட்சுமி, சர வணன், சேக் அப்துல்லா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.